அகிலன் பவுண்டேசன் ஏற்பாட்டில் பதுளை மண்சரிவு அனர்த்த நிவாரணப் பணி - மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு .அகிலன் பவுண்டேசன் ஏற்பாட்டில் , இலண்டன் வோள் இஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய நிதிப்பங்களிப்பில் பதுளை மாவட்டம் அல் - இரிசாத் மகா வித்தியாலய மாணவர்கள் அண்மையில் ஏற்பட்ட மண்சரிவுப்பேரளிவில் கற்றல் உபகரணங்களை இழந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் புதன கிழமை (17.12.2028) நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு அகிலன் பவுண்டேசன் அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் வி.ஆர்.மகேந்திரன் , வித்தியாலய அதிபர், பிரதி அதிபர் , ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது கொப்பி, பென், பென்சில், பாடசாலை பை, பே
போன்ற கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
கல்விக்காக கரம் கொடுத்து உதவிய அனைவருக்கும் நன்றிகளை அப்பகுதி பெற்றோரும், மாணவர்களும், ஆசிரியர்களும் தெரிவித்துள்ளனர்.









0 Comments:
Post a Comment