உண்மையான சுதந்திரம், உண்மையான உரிமை என்பதை மற்றவர்கள் கொச்சைப்படுத்தினாலும்கூட இந்த உரிமை சுதந்திரம், விடுதலை என்பது தமிழர்களுக்கு வேண்டியதொன்றாகும் என்பதை சர்வதேசமும் உணர்ந்துள்ளது. அந்த உணர்வுகளை நாம் மானசீகமாகப் பகிர்ந்து கொள்வோம்.
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். திங்கட் கிழமை (27) மாலை மாவடிமுன்மாரியில் நடைபெற்ற மவீரர் நாள் ஈகைச் சுடர் ஏற்றும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
இலங்கையில் காணப்பட்ட பேரினவாத சிந்தனைகள் அவ்வப்போது காணப்பட்ட அடக்கு முறைகள் பெருந்தேசிய எண்ணத்தினால் நடந்து கொண்ட விளைவுகள், காரணத்தினால் அறவழியில், அகிம்சை வழியில் எதையும் பெறமுடியாது என்ற காரணத்தினால் அன்று இளைஞர்கள் பேராளிகளாக மாறி தமிழர்களின் விடுதலைக்காகப் போராடினர்கள்.
அந்த விடுதலைப் போராட்டத்தில் எமது இளைஞர் யுவதிகள் போராளிகளாக இருந்து ஆயிரமாயிராமாக உயிரை நீத்து தமிழர்களின் சுதந்திரம், மற்றும் விடுதலைகளுக்காக அவர்களது மூச்சை விட்டிருக்கின்றார்கள்.
மாவீரர்களின் எண்ணங்கள், அபிலாசகைள், அவர்களின் சுதந்திர வேட்கைகள், காற்றோடு காற்றாகவும், மூச்சோடு மூச்சாகவும் தமிழர்களிடத்தில் இன்னும் இருந்து கொண்டிருக்கின்றன என்பதை எவரும் மறுதலிக்க முடியாது.
எனவே தமிழர்களின் விடுதலைக்காக தங்களை அற்பணித்த தியாகிகளை நினைவுகூருகின்றோம். உண்மையான சுதந்திரம், உண்மையான உரிமை என்பதை மற்றவர்கள் கொச்சைப்படுத்தினாலும்கூட இந்த உரிமை சுதந்திரம், விடுதலை என்பது தமிழர்களுக்கு வேண்டியதொன்றாகும் என்பதை சர்வதேசமும் உணர்ந்துள்ளது. அந்த உணர்வுகளை நாம் மானசீகமாகப் பகிர்ந்து கொள்வோம் என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment