முஸ்லிம்கள் மீதான படுகொலைகளோடு அப்பாவித் தமிழ் மக்கள் தொடர்புபட்டிருக்கவில்லை என கிழக்கு மாகாண சபை முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய உறுப்பினருமான எம்.எஸ். சுபைர் தெரிவித்தார்.
ஏறாவூர் 121 பேர் படுகொலையின் 27வது நினைவு நிகழ்வு சனிக்கிழமை (12) மாலை ஏறாவூரில் படுகொலை செய்யப்பட்டுள்ளவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள காட்டுப்பள்ளி மஸ்ஜிதுந்நூர் பள்ளிவாசலில் இடம்பெற்றது.
ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய சுபைர்@
கிழக்கில் முஸ்லிம்கள் மீதான படுகொலைகளை ஆவணப்படுத்துகின்றபோது மட்டக்களப்பிலே சுமார் 275 இற்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்களும் யுவதிகளும் கூட தமிழர் உரிமைப் போராட்டத்திலே பங்குகொண்டு தங்களைத் தியாகம் செய்திருக்கின்றார்கள் என்ற ஆதாரமும் இருக்கின்றது.
பின்னாட்களில் அந்த இயக்கத்தில் இணைந்து தங்கள் உயிரையே அர்ப்பணித்துச் செயற்பட்ட விடுதலைப்புலிகள் முஸ்லிம் ஆண் பெண் உறுப்பினர்கள் அந்த இயக்கத்தின் உள் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையில் படுகொலை செய்யப்பட்டார்கள்.
விடுதலைப் புலிகள் அமைப்பிலே உறுப்பினராக இருந்த முஸ்லிம்கள் சுமார் 275 இற்கு மேற்பட்டோர் மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்திலுள்ள பனிச்சங்கேணியிலே ஒரே குழிக்குள் போட்டு படுகொலை செய்தவர் இப்போது இருக்கின்ற கிழக்கின் முன்னாள் எல்ரீரீஈ தளபதியாக இருந்த கருணா என்பதை நான் நன்கு அறிவேன்.
கருணா படுகொலை செய்த எல்ரீரீஈ இயக்க முஸ்லிம் போராளிகளின் படுகொலைக் குழியை அடையாளம் காட்டுவதற்கும் அவரோடு சம்பந்தப்பட்ட நபர்கள் தயாராக இருக்கின்றார்கள்.
நான் ஏற்கெனவே, ஒரு பொலிஸ் உத்தியோகத்தராக கடமையாற்றியிருந்த வேளையிலே மன்னாரில் எமது பொலிஸ் நிலையத்தை எல்ரீரீஈ இனர் சுற்றி வளைத்து அங்கிருந்த ஆயுதங்களைக் கைப்பற்றிச் சென்றார்கள்.
அதேவேளை கிழக்கிலிருந்த பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றிய முஸ்லிம் மற்றும் சிங்களப் பொலிஸாரை கைது சுமார் 600 இற்கும் மேற்பட்டோரைக் கடத்திச் சென்று படுகொலை செய்தார்கள்.
அதன் பின்னரே கிழக்கில் சுதந்திரமாக எல்ரீரீஈ இனர் அப்பாவி முஸ்லிம்களை ஊர் ஊராகப் படுகொலை செய்தார்கள்.
இதுவெல்லாம் எல்ரீரீஈ இயக்கத்தினர் சமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில் செய்த படுகொலைகள்.
எனவே, தனக்கும் கிழக்கில் இடம்பெற்ற முஸ்லிம்கள் மீதான படுகொலைகளுக்கும் சம்பந்தம் இல்லை என்று தப்பித் கொள்ளும் கருணா இப்பொழுது கிழக்கை முஸ்லிம்களிடமிருந்து விடுவிக்கும் போராட்டத்தில் ஈடுபடுவதாகத் தெரிவித்திருப்பது அவரது கடந்த கால இனப்படுகொலையை நியாயப்படுத்துகிறது.
எனவே, கடந்த காலத்தில் முஸ்லிம்கள் மீது தனித்தனியாகவும், கொத்துக் கொத்தாகவும் ஊர் ஊராகவும் இடம்பெற்ற இனப்படுகொலைச் சம்பவங்கள்பற்றி கருணா அம்மான் உள்நாட்டிலும் சர்வதேச யுத்தக் குற்ற நீதி மன்றங்களிலும் விசாரிக்கபட்டு தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.
தமிழ மக்களால் புறக்கணிக்கப்பட்ட கருணாவின் கடந்த கால வன்முறைகளுக்கு கருணை காட்ட வேண்டிய கடப்பாடு எந்த சமூகத்துக்கும் இல்லை.
இப்பொழுதும் தமிழ் முஸ்லிம் சமூகங்களைப் பிரித்து இனப்படுகொலைகளுக்குத் தூபமிடும் கருணாவின் நயவஞ்சகத்தை நன்கு புரிந்து கொண்டு தமிழர் முஸ்லி;ம்கள் சிங்களவர் என்ற பேதமின்றி நாம் அனைவரும் சமாதானத்துக்காக பணியாற்ற வேண்டும்.
கருணா காலத்தினால் நிராகரிக்கப்படுவதையும் குற்றவாளிக் கூண்டில் கூனிக்குறுகி நிற்பதையும் காலம் உணர்த்தும்.”
0 Comments:
Post a Comment