17 Jun 2017

வடக்கு முதலமைச்சர் கையாண்ட விடயம் மிகவும் சரியானது- கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன்

SHARE
வடக்கு முதலமைச்சர் கையாண்ட விடயம் மிகவும் சரியானது ஆனால் அதனை கையாண்ட முறையில் சற்று மாற்றத்தினை ஏற்படுத்தியிருந்தால்  நூறு வீதம் நன்றாகவும் மிகவும் திருப்தியாக இருந்திருக்கும். என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் .கலையரசன் தெரிவித்தார்.


வடக்கு மாகாண சபை தொடர்பாக வெள்ளிக்கிழமை மாலை(16)  கருத்துக் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்….

வடகிழக்கு பிரதேசம் தேவை என்று எண்ணி ஆயுதம் ஏந்திப்போராடி இலட்சக்கணக்கான தமிழன் மரணித்தற்கு பிறகு வடக்கு வேறு கிழக்கு வேறென பேரினவாதம் கொண்டு வந்த நிகழ்ச்சி நிரலின் கீழ்  ஒரு மாகாணத்தை வழிநடத்த முடியாது தத்தளித்துக் கொண்டு இருக்கும் எமது இனம் சார்ந்த தலைவர்களுக்கு  நான் என்ன சொல்வதென்று எனக்கு தெரியாதுள்ளது.
  
உண்மையாக செல்லுகின்றேன் மிகவும் கவலையாக உள்ளது. வடமாகாண முதலமைச்சர் கையாண்ட விடயங்கள் மிகவும் முக்கியமாக இருந்தாலும் கொஞ்சம் நிதானப்போக்கை கடைப்பிடித்திருக்க வேண்டும். வடக்கு முதலமைச்சர் கையாண்ட விடயம் மிகவும் சரியானது ஆனால் அதனை கையாண்ட முறையில் சற்று மாற்றத்தினை ஏற்படுத்தியிருந்தால்  நூறு வீதம் நன்றாகவும் மிகவும் திருப்தியாக இருந்திருக்கும்

அதாவது வடக்கு மாகாண சபையில் அமைச்சர்கள் மத்தியில் ஊழல் நடத்திருந்தால் அதனை நிச்சயiமாக வெளிக் கொணர்ந்து சட்ட நடவடிக்கை  எடுக்கப்படவே வேண்டும். இதில் மாற்று கருத்திற்கு இடமில்லை காரணம் பலதரப்பட்ட அழிவுகளை சந்தித்த மக்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக அமைச்சர்களின் செயற்பாடு இடம் பெற்றுள்ளதை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாத விடயம்தான். இருந்தாலும் எனது கருத்து என்னவென்றால் அமைச்சர்களுக்கு எதிரான விசாரணை நடந்து முடிந்தபிற்பாடு கட்சி முக்கியஸ்தர்களான இரா.சம்பந்தன் ஐயா,மாவை சேனாதிராஜா, சுமந்திரன் ஆகியோருடன் கலந்து ஆலோசனை நடாத்தி முடிவினை எட்டியிருக்கலாம் இவ்வாறு நடைபெற்றிருந்தால் வடக்கு முதலமைச்சரின் செயற்பாடு நூறு வீதம் ஆதரவினைப் பெற்றிருக்கும் என்பதே எனது கருத்து என இதன்போது தெரிவித்தார்.



SHARE

Author: verified_user

0 Comments: