களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற பதில்
பதிவாளர் கைது.
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி
நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு சான்றுப்பொருள் வைக்கும் அறையில் இருந்து 1 கோடி முப்பது
இலட்சம் பெறுமதியான 350கிறாம் தங்க நகைகள் காணமல் போன சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி
நீதவான் நீதிமன்ற பதில் பதிவாளர் களுவாஞ்சிகுடி பொலிசாரால் வியாழக்கிழமை(20.11.2025)
கைது செய்யப்பட்டுள்ளார்.
களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற பதில் பதிவாளர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளதோடு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
.jpeg)
0 Comments:
Post a Comment