21 Nov 2025

அரசாங்கத்தின் விவசாய நவீனமயமாககல் திட்டத்தின் கீழ் செய்கை பண்ணப்பட்ட மாதுளைப் பழம் அறுவடை.

SHARE

அரசாங்கத்தின் விவசாய நவீனமயமாககல் திட்டத்தின் கீழ் செய்கை பண்ணப்பட்ட மாதுளைப் பழம் அறுவடை.

அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள  வறுமை ஒழிப்புச் செயற்பாட்டின் விவசாய நவீன மயமாக்கல் செயற்றிட்டத்தின் கீழ் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாதுளைப் பழச் செய்கையின் ஒரு பகுதி இன்றயதினம் வெள்ளிக்கிழமை(21.11.2025) அறுவடை செய்யப்பட்டது.

களுவாஞ்சிகுடி அக்றி விலேஜ் கம்பனியின் தலைவர் எஸ்.மதிசிவம் தலைமையில் நiபெற்ற இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உ.உதயசிறீதர், கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவச பணிப்பாளர் எம்.பரமேஸ்வரன், மற்றும் மாதுளைச் செய்கையாளர்கள், என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர். 

வறுமை ஒளிப்புச் செயற்பாட்டின் ஒரு அங்கமாக விவசாய நவீன மயமாக்கல் செயற்பாட்டின் கீழ் அப்பிரதேசத்தில் 150 விவசாயிகள் இந்தியன் உயர் ரக ரெட் ஏஞ்சல் மாதுளைப் பழச் செய்கை ஈடுபட்டுள்ளனர். 

உள்ளுர் உற்பத்தியான இந்த வகை மாதுளைப் பழத்திற்கு உள்ளுரில் அதிக கிராக்கி இருந்து வருகின்றது. ஒரு கிலோ 1500 ரூபா தொடக்கம் 2000 ரூபா வரையிலும்  விற்பனை செய்து வருகின்றனர். இதன்மூலம் அப்பகுதி விவசாயிகள் அதிக நன்மையடைந்து வருகின்றனர்.
























SHARE

Author: verified_user

0 Comments: