17 Jun 2017

விருந்து சிற்றிதழ் வெளியீட்டு விழா இன்று

SHARE
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
பாண்டிருப்பு துஜியந்தனை ஆசிரியராக கொண்டு வெளிவரும் விருந்து சிற்றிதழின் மூன்றாவது இதழ் வெளியீட்டு விழா 17 ஆம் திகதி இன்று சனிக்கிழமை பி.ப 3.30 மணிக்கு கல்முனை டிலானி றெஸ்ட் இன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. எழுத்தாளர் எஸ். அரசரெத்தினம் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை ஆதாரவைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன் கலந்து கொள்ளவுள்ளார்.
சிறப்பதிதியாக மாணவ மீட்பு பேரவைத் தலைவர் எஸ்.கணேஸ் கலந்து கொள்கின்றார். நூல் முதற் பிரதியை குருமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலய பிரதி அதிபர் கு.பிரபாகரன் பெற்றுக்கொள்ளவுள்ளார்.
நூல் வெளியீட்டுரையினை ஒய்வு நிலை அதிபர் கா.சந்திரலிங்கம் நிகழ்த்தவுள்ளார். நூல் நயவுரையினை மகுடம் வி.மைக்கல் கொலின் நிகழ்த்தவுள்ளார். இலக்கிய அதிதியாக மூத்தகவிஞர் மு.சடாட்சரன் கலந்து கொள்கின்றார். கௌரவ அதிதியாக குருமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலய அதிபர் க.சத்தியமோகன் கலந்துகொள்கின்றார். 
வரவேற்புரையினை ஒய்வு நிலை அதிபர் இ.இராஜரெத்தினம் நிகழ்தவுள்ளார். ஏற்புரையினை விருந்து ஆசிரியர் அகரம் செ.துஜியந்தன் வழங்கவுள்ளார். 
நூலின் சிறப்பு பிரதிகளை முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கா.கணேஸ், சேவோ நிறுவன பணிப்பாளர் கே.சத்தியநாதன், களுதாவளை திருஞான சம்பந்தர் குருகுலம் தலைவர் பி. குணசேகரன், சம்சுங் சிங்ககிரி முகாமையாளர் ரி.இளங்கோ, மனிதாபிமான அபிவிருத்தி தாபன பணிப்பாளர் கே.சாருகாஸ், பிராந்திய விற்பனை முகாமையாளர் பி.ஜெகநாத், கல்முனை-03 இந்து இளைஞர் மன்ற தலைவர் எம்.வித்தியகாந், வின்னர் விளையாட்டுக் கழக தலைவர் கே.செல்வராஜ், ஊடகவியலாளர் கே.விஜயரெத்தினம், ஆசிரியர் ஆர். மோகப்பிரசன்னா, சுகா வீடியோ உரிமையாளர் ஆர்.ரகு ஆகியோர் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.

இந் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
SHARE

Author: verified_user

0 Comments: