20 Nov 2025

முனைத்தீவு சக்தி மகாவித்தியாலயத்தின் குறைபாடுகள் தொடர்பில் வலயக் கல்விப் பணிப்பாளருடன் கலந்துரையாடல்.

SHARE

முனைத்தீவு சக்தி மகாவித்தியாலயத்தின் குறைபாடுகள் தொடர்பில் வலயக் கல்விப் பணிப்பாளருடன் கலந்துரையாடல்.

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள முனைத்தீவு சக்தி மகாவித்தியாலயத்தின் குறைபாடுகள் தொடர்பில் முனைத்தீவு கிராம மக்கள் பட்டிப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரன் அவர்களை வியாழக்கிழமை பட்டிருப்பில் அமைந்துள்ள வலயக் கல்வி அலுவலகத்திற்கு நேரில் சென்று  கலந்துரையாடியுள்ளனர். 

முனைத்தீவு சக்தி மகா வித்தியால மாணவர்களின் கல்வி சம்பந்தமாகவும், அங்கு  கற்பிக்கும் ஆசிரியர்கள், மற்றும் பௌதீக வளங்கள் சம்பந்தமாகவும் கிராம மக்கள் இதன்போது வலயக் கல்விப் பணிப்பாளரிடம் எடுத்துக் கூறினர். பாடசாலையில் காணப்படும் வளப்பற்றாக்குறையை மிகவிரைல் நிவர்த்தி செய்து வருமாக வலயக் கல்விப் பணிப்பாளர் இதன்போது தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில்  பட்டிருப்பு வலயத்தில் கல்விக்காக ஆற்றிவரும் சேவையைப் பாராட்டி முனைத்தீவு கிராம மக்களால் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு இதன்போது பொன்னாடை போரத்தி மலர்மாலை அணிவித்து கௌரவித்தனர்.





SHARE

Author: verified_user

0 Comments: