வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் முதலமைச்சர் விட்ட பிழை என்று ஒரு நிரல் வைத்திருக்கின்றார்கள். இப்பொழுதுதான் அந்த விடயங்களைப்பற்றி வெளியிடுகின்றார்கள். அந்த நிரல்களையும் உள்ளடக்கியதாகத்தான் அந்த பிரேரணையை வெளியில் இருக்கும் மிக முக்கிய நபர்களின் கையெழுத்துக்களையும் பெற்று அதணை இணைத்து ஆளுனரிடம் கையளிப்பார்கள். இதற்கான வேலைப்பாடுகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. நம்பிக்கையில்லா பிரேரணை வாபஸ்வாங்கப்பட்டது என்பது பொய்யான செய்தி என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகி கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
வடமாகாண சபை விவகாரம் தொடர்பில் தமிழரசுக் கட்சின் பொதுச் செயலாளர் என்றவகையில் இது தொடர்பில் வெள்ளிக்கிழமை மாலை(16) கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வடமாகாண தற்போதைய நடைமுறை தொடர்பாக இரண்டு விதமான அணுகுமுறைகள் கையாளப்படுகின்றன. ஒன்று வடமாகாண சபை உறுப்பினர்கள் என்ற வகையிலே அவர்களுக்குள்ள சிறப்புரிமைகள், அதிகாரங்கள், தத்துவங்கள் என்ற அடிப்படையில் அவர்கள் செயற்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். இதன் அடிப்படையில் முதலமைச்சர் எடுத்துக் கொண்ட தீர்மானம் பிழையென்ற அடிப்டையில் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை ஆளுனரிடம் கொடுத்திருக்கின்றார்கள். அதனை வலிது படுத்துவதும் அதற்கான நடவடிக்கை தொடர்பாகவும் அவர்கள் சிந்தித்துக் கொண்டு இருக்கின்றார்கள். எங்களுக்கும் அதனைத் தெரிவித்திருக்கின்றார்கள்.
இந்த பிரச்சினை எழுவதற்கான முக்கிய காரணம் என்னவென்றால் குறிப்பிட்ட நான்கு அமைச்சர்களுக்கும் எதிராக எழுந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முதலமைச்சர் அவர்கள் ஆணைக்குழு வொன்றை நியமித்து அந்த ஆணைக்கழுவின் அறிக்கையைப் பெற்று, அந்த அறிக்கை இரண்டு அமைச்சர்களை குற்றம் கண்டிருப்பதாகவும், இரண்டு அமைச்சர்கள் மீது குற்றம் காணவில்லை என்றும் குறிப்பிட்ட அதேவேளை குற்றம் காணப்பட்ட இருவரும் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் ஏனைய இருவரும் கட்டாய விடுமுறையில் செல்ல வேண்டும் எனவும் முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மாகாண சபை நடைமுறைகளை ஒட்டியதாக நடைபெறவில்லை. மாகாண சபை சட்டத்திற்கு மேலாக சம்பிரதாயங்களிலே கூடுதலாக தங்கியிருக்கின்றது. குறித்த அமைச்சர்களுக்கு எதிராக குறித்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தால் அவ்வப்போது கையாண்டு இதற்கு அமைவாக அமைச்சர்களை அழைத்து இது தொடர்பான விளக்கம்களை கேட்டு அதனை சீர்திருத்தி ஒரு நல்லதொரு இயங்குநிலைக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். எனவே இந்த விடயத்தில் முதலமைச்சர் சரியாக நடந்து கொண்டாரா? என்பது கேள்விக்குறியாகும்.
எனவே அந்த விடயங்கள் சரியான முறையிலே கடைப்பிடிக்கவில்லை என்பதனை அதோடு நிறுத்திக் கொண்டு. மேலதிகமாக பாரத்தாலும் கூட குற்றம் காணப்படாத ஏனைய இரண்டு அமைச்சர்களையும் கட்டாய விடுமுறையில் அனுப்புவதென்பது எந்த மாகாணசபையினுடைய சம்பிரதாயத்திலுமே கிடையாது. கட்டாய விடமுறையென்பது அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான ஒரு நடைமுறையாகும். மற்றும் விசாரணையில் ஒரு குற்றமும் காணப்படாதபோது அவர்களுக்கு இன்னொரு விசாரணை செய்வதென்பது. நீதி, நிருவாகத்துறையில் கூட அப்படியொரு நிலமை இடம்பெறுவதில்லை. ஆகவே இதுவும் இன்னொருவிதத்தில் ஒரு வினோதமான முறையாகவுள்ளது.
அதாவது இவ்விடயம் தொடர்பாகத்தான் மாகாண சபை உறுப்பினர்கள் தங்களுடைய அதிதிருப்திகளை தெரிவித்திருக்கின்றார்கள். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் விட்ட பிழை என்று அவர்கள் ஒரு நிரல் வைத்திருக்கின்றார்கள். இப்பொழுதுதான் அந்த விடயங்களைப்பற்றி வெளியிடுகின்றார்கள். அந்த நிரல்களையும் உள்ளடக்கியதாகத்தான் அந்த பிரேரணையை, வெளியில் இருக்கும் மிக முக்கிய நபர்களின் கையெழுத்துக்களையும் பெற்று அதணை இணைத்து (வெள்ளிக் கிழமை ) ஆளுனரிடம் கையளிப்பார்கள். இதற்கான வேலைப்பாடுகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.
இவ்வாறு ஒரு பக்கம் போய்க் கொண்டு இருக்கின்ற அதே நேரத்தில் நாங்கள் கட்சி என்ற ரீதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளே இருக்கின்ற பல்வேறு கருத்து முரண்பாடுகளுக்கு மத்தியிலும் ஒற்றுமையை கடைப்பிடிப்பது எவ்வாறு என்பது தொடர்பில் எங்களுடைய தலைவர் முதலமைச்சருடன் அடிக்கடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றார். அந்த வகையிலே ஒற்றுமையை கடைப்பிடித்து கட்சி நலன்களுக்கு அப்பால் தமிழ் மக்களின் நலனினை கருத்திற்கொண்டு தமிழ் மக்கள் தொடர்பாக மூன்றாம் தரப்பினரின் காதுகளுக்கு எவ்வாறு எமது செய்திகளை கொடுக்க வேண்டும் என்பது தொடர்பான விடயங்கள் நடை பெற்றுக் கொண்டு இருக்கின்றது.
அதேவேளை இந் விடயத்தை வைத்துக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேலே ஏற்கவே வைத்திருந்த வஞ்சத்தை தீர்த்துக் கொள்வதற்காக பலர் முயன்று கொண்டு இருக்கின்றார்கள். அவர்கள் தற்பொழுது தாங்கள் முதலமைச்சருக்கு சார்பானவர்கள் என்று காட்ட முற்படுகின்றார்கள். முதலமைச்சர் வேட்பாளராக நீதியரசரை நாங்கள் களமிறக்கியபோது அவரை பலதரப்பட்ட வகையில் குறை கூறியவர்கள் எல்லாம் தற்பொழுது அவருக்காக பரிந்துபேச முற்படுவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற வஞ்சகத்தை தீர்த்து கொள்வதே தவிர தமிழ் மக்களில் அரசியல் அக்கறை காட்டும் விடயம் என்பது கிடையாது.
எவ்வகையிலும் மாகாண சபை உறுப்பினர்களின் உரிமையில் தலையிடாத வகையிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எவ்வகையிலும் கட்டிக்காக்க வேண்டும், என்தன் அடிப்படையிலும் நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துக் கொண்டு இருக்கின்றோம்.
முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வாபஸ் வாங்கப்பட்டுள்ளதா? ஏனக் கோட்ட போது ….
முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத்தீர்மானம் இன்னும் வாஸ் வாங்கப்பட வில்லை முதலமைச்சருடனான இணக்கப்பாடு வரும் பட்சத்தில்தான் வாபஸ் வாங்கப்படும். வாங்கப்பட்டதாக வரும் செய்திகள் பொய்யானவை.
வட மகாண சபை விவகாரம் தொடர்பில் தமிழரசுக் கட்சியை மாத்திரமே ஊழலுக்கு துணைபோகின்ற கட்சி என குற்றம் சாட்டுகின்றனரே இது தொர்பில் உங்கள் கருத்து என்ன? …..
என வினாவிய போது ஒரு கூட்டுக்கட்சி ஒன்று இருக்கின்றபோது அதில் தாய்க்கட்சி ஒன்று இருக்கம் அதனோடு கட்சிகள் சேர்ந்து கொள்வதும் முரண்பட்டுக் கொள்வதும் வளமை. தாய்க்கட்சி எப்போதும் கூடுதலான அங்கத்துவம் கொண்ட கட்சியாக காணப்படும். இதனை அடக்க நினைப்பது அனைத்து நாடுகளிலும் இருக்கின்ற ஒரு நடைமுறையாகும். இதில் ஜனநாயகம் என்னவென்றால் பெரும்பான்மையாக காணப்படும் கட்சியுடன் கூட்டுகட்சிகள் ஒத்து போவதுதான் ஜனநாயகம் ஆகும் இதனை கடைப்பிடிக்காமல் தங்களின் வழியில் வரவேண்டும் என்று சொல்வதெல்லம் ஏற்றுக் கொள்ளக் கூடிய விடமில்லை. எங்களுடைய வீட்டுச் சின்னம் தேர்தலுக்கு மாத்திரம் தேவைப்படும் பின்னர் வீட்டுக்குள் வந்தவுடன் வீட்டுக்கு யான்னல் வைக்கலாம் என்று போகும் போது வீட்டுக்காறன் அவதானமாகத்தானே இருப்பான் இதே நிலைப்பாட்டிலேயே தான் தமிழரசுக் கட்சி இருக்கின்றதே ஒளிய தமிழரசுக் கட்சி எதும் கெடுதல் செய்யவில்லை.
உண்மையில் அமைச்சர்கள் ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தால் முதலமைச்சரின் குறித்த நடவடிக்கை சரியென ஏற்றுக் கொள்வீர்களா?
ஊழல் நடவடிக்கையில் இரண்டு விடயம் இருக்கின்றது. இரண்டு அமைசர்களும் வெவ்வேறு விதமான குற்றச்சாட்டு உள்ளது. ஒரு அமைச்சருக்கு எதிரானதுதான் ஊழல் குற்றச்சாட்டு. இராண்டாவது அமைச்சருக்க எதிரான குற்றச்சாட்டு என்பது நிர்வாக நடவடிக்கையிலே பிறள்வு என்பதாகும். எனவே இரண்டும் ஒரேவிதமான குற்றச்சாட்டுக்கள் அல்ல. தீர்ப்பு சொல்லப்படுவதாக இருந்தாலும் கூட வெவ்வேறு வகையான தீர்ப்புக்கள் கூறப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த ஊழலிலே அகப்பட்டவர் என்று நிருபிக்கப்பட்ட அமைச்சர் தற்பொழுது முதலமைச்சருக்கு சார்பாக இருக்கின்ற, அதேவேளை தன்னை ஓரங்கட்டுவதற்காக தமிழரசுக் கட்சி மேற்கொண்ட நடவடிக்கைதான் இது என்ற புதிய வியாக்கியானத்தை உருவாக்கியுள்ளார்.
உண்மையில் முதலமைச்சர் நேர்மையானவராக இருந்திருந்தால், அவ் அமைச்சரது ஆதரவை நிராகரித்திருக்க வேண்டும். முதலமைச்சர் தன்னால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவினால் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளி என பிரகடண படுத்திய பிறகு அவருடைய ஆதரவு அவருக்கு வழங்கப்படுகின்ற பொழுது இதில் என்ன ஒழுக்கவியல் கோட்பாடு உள்ளது என்பது தொடர்பில் அனைவரும் கேட்கப்படும் ஒரு விடயமாகும். இதைப்பார்த்தால் ஊழல் செய்தவர் அவர் பக்கத்தில்தான் இருக்கின்றார். கல்வி அமைச்சருக்கு நிருவாக பிறள்வுகளில் குற்றம் நிருபிக்கப்பட்டுள்ளது. உண்மையில் வடக்கு மாகாணத்தில் நான்கு அமைச்சர்கள் பிழைவிட்டிருந்தால் கூட்டுப்பொறுப்புடன் செயற்படும் முதலமைச்சர் என்ற வகையில் அவர்தான் தனது பதவியை முதலில் இராஜினாமா செய்து பதவி துறக்கவேண்டியவர் முதலமைச்சர்தான். அவரது அமைச்சரவைதான் இது இவ்வாறான அமைச்சர்களுடன் வேலை செய்வதற்கு தயார்இல்லையென அவர் முன்மாதிரியாக பதவியை இராஜனாமா செய்திருந்தால் இது மிகச்சிறந்த முன் உதாரணமாக அது அமைந்திருக்கும். என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment