21 Nov 2025

மிருகங்களிலிருந்து மனிதர்களுக்கு தொற்றும் நோய்கள் தொடர்பான விழிப்புணர்வு.

SHARE

மிருகங்களிலிருந்து மனிதர்களுக்கு தொற்றும் நோய்கள் தொடர்பான விழிப்புணர்வு.

மிருகங்களிலிருந்து மனிதர்களுக்கு தொற்றும் நோய்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு கிழக்கு மாகாண குறித்தொதுக்கப்பட்ட வேலைத்திட்டத்தின் கீழ் வியாழக்கிழமை(20.11.2025) களுவாஞ்சிகுடி கால்நடை வைத்திய அலுவலகத்தினால் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது. 

கற்பிணித் தாய்மாருக்கு மேற்கொள்ளப்பட்டிருந்த இந்நிகழ்வில், மிருகங்களிலிருந்து மனிதர்களுக்கு தொற்றும் நோய்கள், அவ்வாறான நோய் தொற்றுக்களில் பீடிக்கப்பட்டால் குறைப்பிரசவம், அங்கவீனமான குழந்தைகள் பிறத்தல், கருவில் இருக்கும் போது சிசு மரணித்தல், போன்ற பல விடையங்கள் தொடர்பில் விழிப்புணவூட்டப்பட்டன. 

களுவாஞ்சிகுடி கால்நடை வைத்திய அலுவலகத்தின் கால் நடை வைத்தியர்கள், இதன்போது கலந்து கொண்டு மிருகங்களிலிருந்து மனிதர்களுக்கு தொற்றும் நோய்கள் தொடர்பாக கற்பிணித் தாய்மாருக்கு உரிய விளக்கங்களையும் தெழிவூட்டல்களையும் வழங்கியிருந்தனர்.












SHARE

Author: verified_user

0 Comments: