13 Jun 2017

தமிழினம் குந்தி இருப்பதற்குக் கூட ஒரு நாடு இல்லை-வெள்ளிமலை

SHARE
இந்து மத்ததையும், தமிழினத்தையும் பேணிப்பாதுகாப்பதற்குரிய ஒரு சட்டத்திட்டங்களில்லை,  ஆதியும், அந்தமும் இல்லாத எமது மதமும், தமிழினமும் குந்தி இருப்பதற்குக் கூட ஒரு நாடு இல்லை, இந்நிலையில்கூட பல தமிழ் பெண்கள் வறுமை தாங்க முடியாமல், சீதனக் கொடுமைகளினால் கடந்த சில நாட்களுக்குள் ஏனைய மதங்களைத் தழுவிச் சென்றுள்ளார்கள்.  இவற்றுக்கெல்லாம் காரணம், நமது மதத்தலைவர்களும், என்போன்ற மக்கள் தலைவர்களும், தனவந்தர்களும், இந்து மதத் தலைவர்களுமே என நான் கருதுகின்றேன். 


என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை) தெரிவித்துள்ளார்.

இந்து சமய அறநெறிக் கல்வி விழிப்புணர்வுக் கொடி வாரத்தை முன்னிட்டு  அறநெறிப் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களினால் முன்நெடுக்கப்பட்ட திருஞான சம்மந்தர் குரு பூசைப் பேரணி ஞாயிற்றுக் கிழமை (11) முனைத்தீவு மற்றும், பெரியபோரதீவு ஆகிய இடங்களிலிருந்து ஆரம்பமாகி கேவில்போரதீவு கண்ணகியம்மன் ஆலயத்தை வந்தடைந்தது. பின்னர் ஆலயத்தில் திருஞான சம்மந்தர் குரு பூசை நடைபெற்று. மாணவர்களின் தேவார பாராயணங்களும் இடம்பெற்றன. 

போரதீவுப்பற்று பிரதேச இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் சி.உதயமலர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை, முனைத்தீவு விநாயகர் அறநெறிப் பாடசாலை, பெரியபோரதீவு முத்துவிநாயகர் அறநெறிப்பாடசாலை, கோவில்போரதீவு கண்ணகி அறநெறிப்பாடசாலை, போன்றவற்றின் மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலே கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கிருஸ்ணபிள்ளை இவ்வாறு குறிப்பிட்டார். இதில் அவர் மேலும் தெரிவிக்கையில்….. 

கடந்த காலத்தில் சைவ சமயத்திலும், தமிழினத்திலும் எவற்றையெல்லாம் இழந்தோமோ அவற்றையெல்லாம் எதிர் காதலத்தில் மீளப் பெறவேண்டும். இதுவே எமதினத்தின் தலையாய கடமையாகவுள்ளது.  அறநெறிப் பாடசாலைகளின் பணி மென்மேலும் பல மடங்கு அதிகரிக்கச் செய்து, அவற்றினூடாக மாணவர்கள் அனைத்து நெறிகளையும் அறிந்தவர்களாக உருவாக்கப்பட வேண்டும். அந்த வகையில் கடந்த காலங்களைவிட தற்போது அறநெறிப்பாடசாலைகள் பரிணாம வளர்ச்சிபெற்று வருகின்றதை அவதானிக்க முடிகின்றது.

இருந்தபோதிலும், பெற்றோர்களும், இந்துமதப் பெரியார்களும், அறநெறிகளுக்கு வளங்குகின்ற ஒத்தாசைகள் குறைவாகத்தான் உள்ளன.  ஏனெனில் அறநெறி ஆசிரியர் ஒருவருக்கு வருடத்தில் 2000 ரூபாய் மாத்திரம்தான் வழங்கப்படுகின்றது. இந்தக் கொடுப்பனவு அவர்களுக்குப்போதாது. இவற்றுக்காகவேண்டி மக்கள் பிரதிநிதிகளும், இந்துமத பெரியார்களும், ஆலய தர்மகத்தாக்களுத் சிந்துத்துச் செயற்பட வேண்டியுள்ளது.

இந்து மத்ததையும், தமிழினத்தையும் பேணிப்பாதுகாப்பதற்குரிய ஒரு சட்டத்திட்டங்களில்லை,  ஆதியும், அந்தமும் இல்லாத எமது மதமும், தமிழினமும் குந்தி இருப்பதற்குக் கூட ஒரு நாடு இல்லை, இந்நிலையில்க்கூட பல தமிழ் பெண்கள் வறுமை தாங்க முடியாமல், சீதனக் கொடுமைகளினால் கடந்த சில நாட்களுக்குள் ஏனைய மதங்களைத் தழுவிச் சென்றுள்ளார்கள்.  இவற்றுக்கெல்லாம் காரணம், நமது மதத்தலைவர்களும், என்போன்ற மக்கள் தலைவர்களும், தனவந்தர்களும், இந்து மதத் தலைவர்களுமே என நான் கருதுகின்றேன். 

ஏனைய மதங்களைப் பேணிப்பாதுகாப்பதற்கு அம்மதங்களைச் சேர்ந்த மக்கள் அவர்களின் மக்கள் பிரதிநிதிகள், மதப்பெரியார்கள், தனவந்தர்கள், கல்விமான்கள் என அனைவரும் ஒன்றிணைந்து ஒரு அமைப்பை உருவாக்கி வைத்துள்ளார்கள். ஆனால் தமிழ் மக்கள் வாழும் கிராமங்களில் வசதிபடைத்தவர்களும், உயர் பதவிகளில் உள்ளவர்களும், சாதிகளில் உயர்ந்தவர்களுமே அமைப்புக்களிலே பதவி வகித்துக் கொண்டு இந்து ஆலயங்களில் பல லெட்சக்கணக்கில் பட்டாசு கொழுத்தி திருவிழாக்களை நடாத்துகின்றார்கள். ஹெலிகொப்டரில் ஆலய கும்பாபிசேகங்களுக்கு பூமழை சொரிகின்றார்கள். 

பல லெட்சக்கணகாகண பணத்தைப் செலவு செய்து பட்டாசு கொழுத்தி புகையாக்கும் பணங்களையும், தமிழினத்தைச் சுட்டுக் கொன்ற கெலிக்கொப்டருக்குக் கொடுக்கும் பணங்கள் அனைத்தையும் கொண்டு  அறநெறி ஆசிரியர்களுக்கு மனம்குளிரக்கூடிய வேதனைத்தை வழங்கலாம், அவர்களை வருடாவருடம் பாராட்ட வேண்டும், அறநெறி மாணவர்களுக்கு வேண்டிய உதவிகளை மேற்கொள்ளலாம். இவ்வாறு மேற்கொண்டால்தான் எமது மாணவர்கள் எதிர்காலத்தில் வித்துவாங்களாக, பெறியியலாளர்களாகவும், விஞ்ஞானிகளாகவும், வைத்தியர்களாகவும் எதிர்காலத்தில் உருவாக்கப்படுவார்கள். என்பதில் எதுவித சந்தேகமுமில்லை, இவற்றை மேற்கொள்வதற்கு அனைவரும் கைகேர்த்துச் செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
















SHARE

Author: verified_user

0 Comments: