13 Jun 2017

SHARE
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் பட்டிருப்பு தொகுதி மக்களை ஏமாற்றி சகோதர இனத்திற்கு ஆசனத்தை பெற்றுக் கொடுக்க பட்டிருப்பு தொகுதி ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் கணேசமூர்த்தி  எடுக்கும் நடவடிக்கை தோல்வியிலையே முடியும், பட்டிருப்பு தொகுதி மக்கள் பாரளுமன்ற பிரதிநித்துவத்தை இழந்த ஏக்கத்தின் ஊடாக விழிப்படைந்துள்ளனர்.  என கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.


மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் சதொச திறப்பு விழாவில் பட்டிருப்பு தொகுதி ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் கணேசமூர்த்தி உரையாற்றும் போது எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் பட்டிருப்பு தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி அமோக வெற்றியீட்டும் என தெரிவித்த கருத்து தொடர்பாக  கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமாரிடம் திங்கட் கிழமை (12) தொடர்பு கொண்டு  கேட்ட போதே  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்…..

சென்ற முறை தேர்தலில் ஜக்கிய தேசிய கட்சி யானைச் சின்னத்தில் போட்டியியட்டு முற்றுமுழுதாக தமிழ் மக்களைக் கொண்ட பட்டிருப்பு தொகுதியில் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாதொளித்து, சகோதர  இனத்தவர் ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு பட்டிருப்பு தொகுதி  ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் கணேசமூர்த்தி உகாரணமாக  இருந்தார். இவ்வாறான நிலையில்  எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் பட்டிருப்பு  தொகுதியில் ஜக்கிய தேசிய கட்சி அமோக வெற்றியீட்ட உள்ளதாக மீண்டும் தெரிவித்துள்ளமையானது, இத்தொகுதி மக்களை  அவர் ஏமாளிகளாக நினைத்துள்ளாரோ? என எண்ணத் தோன்றுகின்றது. சென்ற தேர்தலில் பிரதிநிதித்துவத்தை இழந்ததை எண்ணி இத்தொகுதி மக்கள் மிகவும் ஏக்கத்தில் இருக்கின்றனர். இதனால் அவர்கள் தற்போது விழிப்படைந்துள்ளனர். எனவே இம் அமைப்பாளரின் ஏமாற்று வித்தைகள் இனி வருங்காலங்களில் செல்லுபடியாகாது என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.

சதொச நிலையங்களை திறப்பதன் ஊடாக மக்களை திசைமாற்ற முடியாது சதொச நிலையங்களை போட்டி போட்டு திறப்பதன் ஊடாக  மட்டக்களப்பில் என்ன நடைபெற்று வருகின்றது. எமது தமிழ் இளைஞர்கள் அவ் நிலையங்களில் தொழில்புரியாத நிலை ஏற்பட்டுள்ளது. எமது இளைஞர்களை புறந்தள்ளி  சதொச நிலையங்களில் தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றது. கணேசமூர்த்தி அவர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் என்றால்  அமைச்சர்களான அமீரலி, றிசாட்பதுர்தீன் போன்ற அகில இலங்கை மக்கள் காங்கரஸ் கட்சி உறுப்பினர்களுடன் ஏன் ஒட்டிக்கொண்டு திரியவேண்டும். இவர் ஐக்கிய தேசிய கட்சியா? அல்லது அகில அகில இலங்கை மக்கள் காங்கரஸ் கட்சி ? என்பதனை முதலில் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
  
இவர் மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமாக இருந்தால் மட்டக்களப்பு மாவட்த்தில் மக்களுக்கு பயன்தரக் கூடிய ஒசுசல (இலங்கை அரசாங்க மருந்தாக்கக் கூட்டுத்தாபனம்)  
ஒன்றை திறந்து காட்டட்டுங்கள். அம்பாரை மாவட்டத்தில் ஏற்கனேவே ஒன்று திறக்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது நிலையம் நிந்தவூரில் திறப்பதற்கான பூர்வாங்க வேலைகள் இடம் பெற்று வருகின்றது. எனவே எமது மக்களுக்கு மிகவும் தேவையாக உள்ளதைப்பற்றி சிந்தியுங்கள் சதொச போன்ற பூச்சாண்டி வேலைகளை மேற்கொள்வதை எதிர்காலத்தில் தவிர்த்து மக்களுக்கு தேவையான பூர்வாங்க வேலைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: