13 Jun 2017

துறைநீலாவணைக் கிராமம் வீர புருஷர்களை உருவாக்கிய கிராமம் என்பதனையாரும் மறந்துவிடமுடியாது கிழக்குமாகாண சபை உறுப்பினர்.த.கலையரசன்.

SHARE
வடகிழக்கில் பல்வேறுவிடயங்கள் தொடர்பாக பேசப்படுகின்றன இது வரைக்கும் எதுவிதமானதீர்வுகளும் எட்டப்படவில்லை ஆனால் வீர புருஷர்கள் நிறைந்த துறைநீலாவணைக் கிராமத்தினைப் போன்று அன்றுவடகிழக்கில் தமிழர்கள் இருந்திருப்பார்களாயின் இன்று தமிழ் மக்களுக்கு வடகிழக்கில் நிரந்தரமான அரசியல் தீர்வுகிடைக்கப் பெற்;றிருக்கும்.


துறைநீலாவணைகண்ணகிஅம்மன் ஆலயவருடாந்தஉற்சவத்தினைசிறப்பிக்கும் வகையில் நடைபெற்ற கற்புக்கரசுகண்ணகியின் புகழ் பாடும் பாமாலை இறுவட்டுவெளியீடுமற்றும் சாதனையாளர் கௌரவிப்புநிகழ்வு ஞாயிற்றுக் கிழமை இரவு (11) நடைபெற்றது. இதன்போது பிரதமஅதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே கிழக்குமாகாண சபை உறுப்பினர் த.கலையரசன் இவ்வாறுதெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில் … ஒரு இனத்தின் மொழி கலாசார விழுமியங்களை பேணுகின்ற புனிதத்துவம் வாய்ந்த இடம் வணக்கஸ்தலம் என்பதனையாருமேமறந்துவிடமுடியாது. அந்தவகையில் இக்கிராமம் கலைகலாசார விழுமியங்களைமுழுமையாகபின்பற்றுகின்றகிராமம் மாத்திரமல்லாது ஏனைய கிராமங்களுக்குமுன்மாதிரியானகிராமம் என்பதனைதக்கவைத்துக் கொள்ளவேண்டிய தேவையுள்ளது .சாதனையாளர்கள் கௌரவிக்கபடுகின்றமையானது. இக்கிராமத்தின் உயர் கல்விவளர்ச்சினை எடுத்துக் காட்டுவதாக அமைகின்றது.

இளைய சமூகத்தினை ஊக்கப்படுத்துகின்ற இப்படிப்பட்ட முயற்சியானது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது. இக் கிராமத்தினை பொறுத்தமட்டில் கல்விமான்கள் அதிகளவானவர்களை உள்ளடக்கிய கிராமம்.எதிர் காலத்திலும் இவ்வாறான எண்ணக்கருவினை நிலைநாட்டக் கூடியவகையில் இக் கிராமமக்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டியது மிகஅவசியமானது.

எதிர் காலத்தில் துறைநீலாவணைக் கிராமத்திலிருந்து அரசியல் தலைமைகள் உருவாகக் கூடியவகையில் எமது முன்நகர்வுகள் இடம் பெறவேண்டும். அப்போதுதான் இக்கிராமம் முழுமையான அபிவிருத்தி இலக்கினை அடையமுடியும் எனத்தெரிவித்தார்.



SHARE

Author: verified_user

0 Comments: