
படுவான்கரைப்பிரதேசத்தில் அடையாளம் காணும் சில பிரச்சினைகளுக்கு
வழக்குதொடருவதற்கான நிதியுதவிகளை
வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம். என இராசமாணிக்கம்
மக்கள் அமைப்பின் தவிசாளர் இ.சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு
மாவட்டத்தின் பட்டிப்பளை, வெல்லாவெளி ஆகிய பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கொக்கட்டிச்சோலை,
தாந்தாமலை, கடுக்காமுனை, கச்சக்கொடி, கணேசபுரம், பாலையடிவட்டை,
திக்கோடை போன்ற பகுதிகளில் இலவச சட்ட ஆலோசனை சனிக்கிழமை(10) வழங்கப்பட்டது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே
இதனைக் குறிப்பிட்டார்.
சட்ட ஆலோசனைகளை சட்டக்கல்லூரி மாணவர்கள், கனிஸ்ட சட்டத்தரணிகள், சிரேஸ்ட சட்டத்தரணிகள்
மக்களுக்கு வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது
0 Comments:
Post a Comment