அபிவித்திதான் எங்கள் இலக்கு என எண்ணியிருப்போமாக இருந்திருந்தால், கடந்த காலத்தில் பல அமைச்சுப் பதவிகளைப் பெற்று கணேசமூர்த்தி சொல்கின்ற அபிவிருத்திகளைவிட பலமடங்கு செய்திருப்போம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை (10) கொக்கட்டிச்சோலையில் சதொச விற்பனை விலையம் ஒன்று திறக்கப்பட்டது. இவ்விடையம் தொடர்பில் வியாழக்கழமை (15) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்…..
கொக்கட்டிச்சோலையில் கடந்த சனிக்கிழமை (10) சதொச விற்பனை விலையம் ஒன்று திறக்கப்பட்டது. இவ்விடையம் தொடர்பிலான விமர்சனங்களை நான் தனிப்பட்ட நபர்தொடர்பிலோ, அல்லது ஊடகங்களிடமோ வேறு யாரிடமும் தெரிவிக்கவில்லை. இந்த சதொச விற்பனை நிலையத்தை ஒரு கருவாட்டுக் கடை திறக்கப்பட்டுள்ளது. என நான் தெரிவித்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதிய அமைப்பாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசா என்ற கேள்விக் குறியுடன் அரசியல் செய்பவருமான சோ.கணேசமூர்த்தி என்பவர் ஊடகத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். உண்மையிலே நான் யாரிடமும், அல்லது எந்த ஊடகத்திலும் இந்த சதொச விற்பனை நிலையம் ஒரு கருவாட்டுக்கடை என நான் தெரிவிக்கவில்லை அவ்வாறு நான் தெரிவித்த கருத்தை சோ.கணேசமூர்த்தி ஆதர பூர்வமாக காட்டுவாராயின் அதுதொடர்பில் விவாதிப்பதற்கு நான் தயாராக உள்ளேன். எனவே நான் தெரிவிக்காத கருத்தை அவர் ஒரு ஊடகத்தில் தெரிவித்திருப்பதானது அரசியல்வாதி என்ற வித்தில் அது அவருக்கு அழகு இல்லை எனக் கருதுகின்றேன்.
அரசியல்வாதி என்ற ரீதியில் அரசியல் கட்சிகளைப்பற்றிக் கருத்துத் தெரிவிப்பதற்குரிய அதிகாரம், ஆளுமை மற்றும் விருப்புக்கள் அவர்களுக்கு உண்டு. ஆனால் பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் தேர்தல்களில் வெற்றியீட்ட முடியாது, அவ்வாறான வரலாறு இனிவரும் காலங்களில் தமிழரசுக் கட்சிக்கோ அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கோ இல்லை என்ற கருத்தையும் சோ.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
அரசியல்வாதியாக இருந்து, பிரதியமைச்சராக இருந்த வராலாறு சோ.கணேசமூர்த்திக்கு உண்டு. இந்நிலையில் கடந்த கால வரலாறுகளை அவர் புரட்டிப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். பட்டிருப்புத் தொகுதி மாத்திரமின்றி மட்டக்களப்பு மாவட்ட ரீதியில் தொடர்சியாக தம்மிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஊடாக ஒரு அரசியல் தீர்வைப் பெறவேண்டும் என்ற நோக்கில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் உறுதியாக இரு;ககின்றார்கள். 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில்கூட இன்னும் 6600 இற்கு மேற்பட்ட வாக்குக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றிருந்தால் எமது ஆசனங்கள் மேலும் அதிகரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான் கிழக்கு மாகாணசபையை நிருணயிக்கின்ற சக்தியாக மாறியிருக்கும். அந்த தவறு மட்டக்களப்பு மாவட்டத்திலும் விடப்பட்டிருக்கின்றது.
விகிதாசாரத் தேர்தலில் இருக்கின்ற விடையங்கள் என்னவெனில் இன ரீதியாக தமிழ் மக்களுக்கான பிரதிநிதித்துவங்கள் இல்லாமல் போவதற்குரிய காரணங்களாக இருக்கின்றன. பேரினவாதக் கட்சிகளுடாக தமிழ் பிரதிநிதிகள் அக்கட்சிகளில் தேர்தல் கேட்கின்றபோது அதிலே தமிழர்களும், சகோதர முஸ்லிம் வேட்பாளர்களையும் இணைத்து அந்த வேட்பாளர் பட்டியலைத் தயாரிக்கின்றபோது தமிழ் வேட்பாளர்கள் அக்கட்சிக்கான வாக்குக்களை அதிகரிக்கின்ற இந்நிலையில் விருப்பு வாக்கு அடிப்படையில் அதிலிருக்கின்ற முஸ்லிம் ககோதரர்கள்தான் பிரதிநிதிகளாக வருகின்ற வரலாறுகள் உண்டு. விகிதாசாரத் தேர்தலுக்குப் பிற்பட்ட காலப்பகுதியில் எந்தக்கட்சியில் தேர்தல் கேட்டாலும் இந்நிலமைதான் இருந்து கொண்டிருக்கின்றது. அந்த நிலையில்தான் கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்திலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்க முடியாமல் போயிருந்தது.
அவிருத்தி என்பது தேவை அதற்கு முன்பு எமது அடிப்படை உரிமைகள், தமிழ் மக்களுக்கான ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என்பதை வைத்துதான் நாம் அரசியல் செய்து கொண்டிருக்கின்றோம். இதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. எனவே சொற்பிரயோகங்கள் என்பது 64 வருடங்களாக இருந்து அரசியல் தீர்வு கிடைக்கும் வரைக்கும் எமது சொற்பிரயோகங்கள் தொடரும். இதற்காக வேண்டி தமிழ் தேசியக் கூட்டமைப்பை மக்கள் நிராகரித்து விட்டார்கள் பட்டிருப்புத் தொகுதி மக்கள் பேரினவாதக் கட்சியைத்தான் தேடிவார்கள் என தெரிவிக்க முடியாது. மக்கள் தேவைகள் என்று வரும்போது மக்கள் பிரதிநிதி என்கின்ற அனைவரிடமும் செல்வார்கள் அத்தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டியது அவர்களின் கடமை. இதற்காக மக்கள் இலக்கை விட்டு விட்டார்கள் எனக்கூறுவது முட்டாள்தனமாகும்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கணேசமூர்த்தியும் ஐக்கிய தேசியக் கட்சியில் தேர்தல் கேட்டிருந்தார் அவருக்காக அக்கட்சிக்கும் அளிக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் அவர் தெரிவு செய்யப்படாமல் விருப்பு வாக்கு அடிப்படையில் அமீரலி நாடாளுமன்ற உப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதுபோன்றுதான் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் கிழக்கு மகாண முதலமைச்சர்.சி.சந்திரகாந்தனும் தேர்தலில் போட்டியிட்டும், அவரும் தெரிவு செய்யப்படாமல்; எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவும் தோல்வி அடைந்தலும் விருப்பு வாக்கு அடிப்படையில் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்நிலமைகள் விகிதாசாரத் தேர்தலில் தொடர்ச்சியாக இருந்து கொண்டு வருகின்றது. இந்நிலையில் எந்த பேரினவாமக் கட்சிகளிலும் தமிழ் மற்றும் முஸ்லிம் வேட்பாளர்கள் இணைந்து போட்டியிட்டால் உரிய கட்சிக்கு தமிழ் மக்களின் வாக்குகள் கிடைக்கலாமே தவிர நிட்சயமாக விருப்பு வாக்கு என்பது அதிலிருக்கும் தமிழ் பிரதிநிதித்துவத்திக்குக் கிடைக்காது.
பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் சுமார் 88000 வாக்குக்கள் உள்ளன 2000 இத்திற்குக் குறைவான வாக்குகள் சிங்கள் மக்களின் வாக்குக்கள் உள்ளன. இந்நிலையில் பட்டிருப்புத் தொகுதி மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகிச் செல்வார்கள் என யாராவது கூறவார்களேயானால் அவ்வாறு கூறுபவர்களோ எதிர்வரும் தேர்தல்களிலே நாங்கள் கூறியது தவறு என உணர்ந்து கொள்வர்கள். பட்டிருப்புத் தொகுதி மக்கள் தமிழ் தேசியம் தொடர்பில் உறுதியுடன் இருக்கின்றார்கள்.
சுயநிர்ணய உரிமை, தமிழ் தேசியம், சமஸ்ட்டி, தமிழீழம் ஆகிய வார்த்தைப் பிரயோகங்களை வைத்துத்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்குக்களைப் பெறுகின்றது என சிலர் கூறுகின்றார்கள். நாங்கள் 66 வருடங்களாக ஒரு விடுதலைக்காக போராடிய ஒரு இனம் அதுதான் எமது இலக்காக உள்ளது. அதற்காகத்தான் பல்வேறுபட்ட தியாகங்கள் செய்யப்பட்டுள்ளன. 50 ஆயிரம் மாவீரர்கள் இந்த மண்ணிலே மடிந்துள்ளார்கள், 150000 பேர் முள்ளிவாய்க்காலிலும், அதற்கு முன்னர் பல இலட்சம்போரும் இறந்ததும் இந்த விடுதலைக்காகத்தான்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு முன்பிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, இலங்கை இந்திய ஒப்பந்தம் ஆரம்பிப்பதற்கு முன்னர் இருந்த 36 விடுதலை இயக்கங்கள், இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்குப் பின்னர் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கங்கள் போன்றன பல தியாகங்களைச் செய்திருக்கின்றன. இந்த தியாகங்களுக்கான பரிகாரம், நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது இலக்கு வடகிழக்கு இணைந்த மானிலத்திலே தாங்கள் தாங்களே ஆளக்கூடிய சமஸ்ட்டி அரசியல் தீர்வுபெற வேண்டும் என்பது. இரண்டாவது நோக்கம்தான் அபிவிருத்தி. இது பலருக்கு விளங்காமலிருக்கலாம்.
அபிவித்திதான் எங்கள் இலக்கு என எண்ணியிருப்போமாக இருந்திருதால். தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலத்தில் பல அமைச்சுப் பதவிகளைப் பெற்று சோ.கணேசமூர்த்தி தற்போது சொல்கின்ற அபிவிருத்திகளைவிட பலமடங்கு செய்திருப்போம்; என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment