முஸ்லிம்களுக்கெதிராக தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் இனவாத நடவடிக்கைகள் தொடர்பில் விஷேட சந்திப் பொன்றினை எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இராஜவரோதயம் சம்பந்தனுடன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி செவ்வாய்க்கிழமை மாலை (23.05.2017) 4 மணியளவில் மேற்கொண்டது.
எதிர்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் இரு தரப்புப் பிரதிநிதிகளும் சமகால இனவாத நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடியதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
இதன் போது முஸ்லிம்களுக்கு எதிராக தீவிரமடைந்து வரும் இனவாத நடவடிக்கைகள் தொடர்பில் வலியுறுத்திக் கூறியதுடன் அரசாங்கம் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதில் தொடர்ந்தும் பொறுப்பற்ற வகையில் நடந்து வருவதையும் சுட்டிக் காட்டினர்.
கடந்த ஒரு மாத காலத்தில் இடம் பெற்ற இனவாத சம்பவங்கள் தொடர்பான விரிவான அறிக்கை யொன்றினையும் எதிர்கட்சித் தலைவரிடம் ந.தே. முன்னணி பிரதிநிதிகள் கையளித்தனர்.
இதுபற்றி சட்டம் ஒழுங்கு விவகாரம் தொடர்பிலான விசேட பிரேரணையொன்றில் தான் உரையாற்றவுள்ளதாகவும் ந.தே.முன்னணி தெரிவித்த கருத்துக்களை சபையில் முன்வைப்பதாகவும் எதிர்க்கட்சித்தலைவர் உறுதியளித்தார்.
இந்த விசேட பிரேரணையானது கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் ந.தே. முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான், அதன் பொதுச் செயலாளர் நஜா முஹம்மட், தலைமைத்துவ சபை உறுப்பினர்களான சட்டத்தரணி முஹம்மட் இம்தியாஸ், எச்.எம்.எம். ஹனான் முஜிபுர் ரஹ்மான மற்றும் ஏ.டபிள்யூ. முஹம்மட் சப்ரி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.







0 Comments:
Post a Comment