பேச்சுப் போட்டியில் கிழக்குமாகாணரீதியில் முதலாம் இடத்தினை பெரியகல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயமாணவி ஆ.பிதுர்ஷிக்கா பெற்றுபாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்
கிழக்கு மாகாண கல்விதிணைக்களத்தினால் கடந்த சனிக்கிழமை (21) செங்கலடி மகாவித்தியாலயத்தில் நடாத்தப்பட்ட கிழக்கு மாகாணபாடசாலை மாணவர்களுக் கிடையிலான தமிழ்தினப் போட்டியில் இரண்டாம் பிரிவு பேச்சுப் போட்டியில் பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள பெரியகல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 6 இல் கல்வி பயிலும் மாணவி ஆ.பிதுர்ஷிக்கா மாகாணரீரியில் முதலாம் இடத்தினைப் பெற்று தேசியமட்டத்திற்கு தெரிவாகியுள்ளார்.
குறித்த மாணவியினை போட்டிக்கு வழிப்படுத்திய வித்தியாலத்தின் அதிபர் சி.பேரின்பராஜா மற்றும் தமிழ்ப்பாட ஆசிரியை திருமதி எஸ்.சசிகரன் மற்றும் ஏனைய ஆசிரியர்களுக்கு கல்விச் சமூகத்தினர், நன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்துள்ளனர். குறித்தமாணவி 2016 ஆம் ஆண்டு நடைபெற்றதரம் ஐந்துபுலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment