24 May 2017

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் "மகிழ்ச்சியான கற்பித்தலுக்கான" கட்டிடம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டுள்ளது.

SHARE
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் "மகிழ்ச்சியான கற்பித்தலுக்கான" கட்டிடம் அமைப்பதற்கு இன்று(24.4.2017) புதன்கிழமை அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டுள்ளது.மெதடிஸ்த மத்திய கல்லூரியின் முதல்வர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ் தலைமையில் பாடசாலை வளாகத்தில் காலை 9.00 மணியளவில்  நடைபெற்றது. 


இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன்,வலயக்கல்வி அலுவலகத்தின்  பொறியியலாளர் ஏ.எம்.எம்.ஹகீம்,பொறியியலாளர்களான டீ.ஏ.பிரகாஸ்,உ.மயூரன்,மதத்தலைவர்கள்,பிரதியதிபர்கள்,ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம்  இக்கட்டிடம் அமையப்பெறவுள்ளது.இருபத்திநான்கு மில்லியன் ரூபா (24780734)நிதியில் நான்கு வகுப்பறைகளைக்கொண்ட நவீன தொழிநுட்ப இலத்திரனியல் உபகரணங்களை கொண்டதும், முதல்தளமாக அமைக்கப்படவுள்ளது.இவ்வாறான பாடசாலைகள் போன்று வலயக்கல்வி அலுவலகத்தின் கீழ் மேலும் இரண்டு பாடசாலைகளை அமைப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக அறியமுடிகின்றது




SHARE

Author: verified_user

0 Comments: