நான் பல விளையாட்டு போட்டிகளைப் பார்த்திருக்கின்றேன் உண்மையில் களுவாஞ்சிகுடி மக்ஸ் விளையாட்டு கழகமானது முழுமையான ஆளுமையைச் செலுத்தி ஏனைய விளையாட்டு கழகங்கள் கற்றுக் கொள்ள கூடியவிதத்தில் நுட்பமாகவும், சாதுரியமாகவும் இவ் விழையாட்டு விழாவை ஏற்பாடு செய்துள்ளது. இதனை நான் பாராட்டாமல் இருக்க முடியாது, என மட்டக்களப்பு
தமிழ் தேசியக் கூட்டமைப்பின்
நாடாளுமன்ற உறுப்பினரும் மாட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
களுவாஞ்சிகுடி மக்ஸ் விளையாட்டு கழகத்தின் 9 வது வருடாந்த விளையாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (28) கழக தலைவர் ஆர்.கலாபராஜன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணிப்பாளர் பொன்.செல்வநாயம், களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன், மகிழூர் வைத்தியசாலை வைத்திய அதிகாரி பிரசாந்தினி, வைத்தியர் ந.நிவாசன், கணக்களார் எஸ்.அம்பிகாவதி, வைத்தியர் ப.சதீஸ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
இந்த இடத்தில் கண்களை காட்சிகளுக்குள் விட்டுவிட்டு காட்சிகளை உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் எனது பேச்சினை செவிமடுப்பது என்பது கடினமான விடயமாக இருக்கும், என்பதனை நான் உணர்வேன்.
பல விளையாட்டுப் போட்டிகளை நான் பாரத்திருக்கின்றேன், ஆனால் இவ்விளையாட்டுப் போட்டி ஒரு அபிவிருத்தி அடைந்த விளையாட்டு கழகத்தின் விளையாட்டு போட்டி போன்று எனக்கு தென்படுகின்றது. குறிப்பாக பார்கின்றபோது மைதானத்தினை ஒழுங்கமைக்கப்பட்டிருந்த விதத்தினை எடுத்துக் கொண்டாலும் சரி, விளையாட்டுக்களைப் பார்த்தாலும் சரி, விளையாட்டு ஆர்வலர்களை பார்த்தாலும்சரி, அணிந்திருக்கின்ற உடைகளைப்பாரத்தாலும்சரி அபிவிருத்தி அடைந்திருக்கின்ற விளையாட்டு கழகத்தினை போன்று இவ்விளையாட்டுக்கள் நடைபெற்றது.
உண்மையில் முழுமையான ஆளுமையைச் செலுத்தி இந்த விளையாட்டு விழாவை நீங்கள் ஒழுங்குபடுத்தியிருக்கின்றீர்கள்! இந்த விளையாட்டு கழகத்தின் விளையாட்டு நிகழ்வானது ஏனைய விளையாட்டு கழகங்கள் கற்றுக் கொள்ள கூடியவிதத்தில் நுட்பமாகவும், சாதுரியமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த நிகழ்வின் ஒழுங்கமைப்பை பார்க்கின்றபோது இப்படித்தான் விளையாட்டு போட்டி இருக்கவேண்டும் இப்படித்தான் விளையாட்டு நிகழ்வுகள் இருக்க வேண்டும், இப்படித்தான் மக்கள் கலந்து கொள்ள வேண்டும், இப்படித்தான் மேடைகள் அமைக்கப்பட வேண்டும், இப்படித்தான் வரவேற்க வேண்டும், என்பதற்கு முன்னுதாரணமாக இருக்கின்றது. இவ்வாறாக ஒழுங்கமைத்துள்ள உங்களை நான் பாராட்டாமல் இருக்க முடியாது.
ஆண்டு நிறைவை யொட்டி நடாத்தப்படும் விளையாட்டுக்களில் ஒருபடி மேலே சென்று இந் நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதை நான் அறிகின்றேன். ஏனைய கிராமங்களுக்கும் ஒரு முன்மாதிரியாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்கு மீண்டும் ஒரு முறை பாராட்டுவதோடு மேலும் உங்களது விளையாட்டு நிகழ்வுகள் மேம்மேலும் வளர்ச்சியடைந்து மற்றவர்களை பிரமிக்க வைக்க வேண்டும். அதே வேளையில் ஒற்றுமையாக முரண்பாடுகள் செயற்பட்டு சாதனைபடைக்க வேண்டும் .என அவர் இதன்போது தெரிவித்தார்…
0 Comments:
Post a Comment