30 May 2017

கிழக்கு மாகாணத்தில் வீடமைப்புத்துறை சம்பந்தமான சகல வளங்களையும் கொண்ட நிபுணத்துவ தொழிற்பயிற்சி நிலையங்கள் உருவாக்கப்படும் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்

SHARE
கிழக்கு மாகாணத்தில் வீடமைப்புத்துறை சம்பந்மான சகல வளங்களையும் கொண்ட கட்டிட நிருமாணத்துக்குத் தேவையான அத்தனை நிபுணர்களையும் உருவாக்குகின்ற தொழில் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் என அம்மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டங்கள் குறித்துக் கேட்டபோது அவர் திங்கட்கிழமை 29.05.2017 இந்த விவரங்களைத் தெரிவித்தார்.

இதுபற்றி மேலும் தெரிவித்த அவர் கிழக்கு மாகாணத்தில் கடந்த கால யுத்தத்தினாலும், சுனாமி, வெள்ளம் போன்றவற்றாலும் வீடுகளை இழந்த பல்லாயிரம் குடும்பங்கள் உள்ளன.
இவர்களுக்கு குடியிருக்க வீட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியுள்ளது.

ஆகக் குறைந்தது கிழக்கு மாகாணத்தில் 25 ஆயிரம் வீடுகளையாவது உடனடியாக அமைத்துக் கொடுத்து வறியவர்களின் துயர் துடைக்க வேண்டும்.
“செமட்ட செவன” எனும் ஆயிரம்  வீடமைப்புத் திட்டத்தின் கீழ் சில நூறு வீடுகள் கிழக்கு மாகாணத்தில் அமைத்துக் கொடுக்கப்பட்டு வருகின்றன.
யுத்தத்தால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களுக்கு அவர்கள் வாழ்வதற்காக வீடுகள் தேவை இதனை அரசாங்கம் பாரபட்சமின்றி நிறைவேற்ற வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் வீடமைப்புக்கான தேவை அதிகமாகவிருந்தும் அதனை மத்திய அரசாங்கம் நிறைவேற்றாத ஒரு குறைபாட்டை நாங்கள் சுட்டிக்காட்டாமல் இருந்துவிட முடியாது.

யுத்தத்திற்குப் பின்னரான மீள் குடியேற்றம் என்பது கூட கிழக்கு மாகாணத்தில் முழுமையாகவும் திருப்தியாகவும்  இடம்பெறவில்லை.
யுத்தத்தின் காரணமாக வலிந்து இடம்பெயரச் செய்யப்பட்ட, இயல்பாக யுத்தத்தின் கொடூரத்திலிருந்து தப்புவதற்காக இடம்பெயர்ந்த அல்ல வேறு வகைப் பாதிப்புக்களுக்குள்ளான மக்களில் எத்தனையோ பேர் இன்னமும் அதற்கான நிவாரணங்களைப் பெற முடியாத நிலையில் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.

அவர்களில் ஒரு சில குடும்பங்கள் தங்களது சுய முயற்சியில் தங்களை மறுசீரமைத்துக் கொண்டு வாழ்கிறார்கள்.

அதேவேளை, யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களுக்கு மத்திய அரசு மூலமாக ஒரு பாரிய ஒதுக்கீட்டுத் திட்டம் இன்னமும் அமுல்படுத்தப்படாதிருப்பதும் வருத்தமளிக்கிறது.

நாம் எமது மாகாண சபைக்கு ஊடாக ஒவ்வொரு உள்ளுராட்சி மன்ற நிருவாகப் பிரிவிலும் ஒவ்வொரு வீட்டுத் திட்டத்தை அமைப்பதற்குரிய நிதி ஒதுக்கீடுகளைப் பெறுவதற்கான வழிவகைகளைச் செய்து வருகின்றோம்.

அது எங்களுக்குக் கை கூடினால் ஒவ்வொரு உள்ளுராட்சி மன்றப் பிரிவுகளிலும் குறைந்தபட்சம் 50 வீடுகளையாவது நிருமாணித்துக் கொடுத்தால் கிழக்கு மகாணத்திலுள்ள 45 உள்ளுராட்சி நிருவாகத்தினாலும் மொத்தமாக 2250 வீடுகளை வறிய மக்களுக்காக கட்டிக் கொடுக்கக் கூடியதாக இருக்கும்.

2017 இலே அரசினுடைய கொள்கைகள் மாற்றியமைக்கப்பட்டு விகிதாசாரப்படி வீடமைப்பும் இன்னபிற அபிவிருத்திகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று நாங்கள் அவாக் கொள்கின்றோம். இது நடைமுறையில் நிரூபிக்கப்பட்டால்தான் நல்லிணக்கம் என்பது சாத்தியமாகும்”

வீடமைப்பு சம்பந்தமான சகல வளங்களையும் கொண்ட பல்துறை நிபுணர்களை உருவாக்கும் பயிற்சி நிலையங்கள் கிழக்கு மாகாணத்தில் வேண்டும் என்ற வேண்டுகோளை வீடமைப்பு அமைச்சர் சஜித் பிறேமதாஸாவிடம் கேட்டுக் கொண்டதற்கு அமைவாக அதனை உருவாக்க அவர் இணங்கியிருக்கின்றார்.
அதற்குரிய திட்ட முன்மொழிவை அமைச்சர் கேட்டுக் கொண்டதற்கமைவாக அதனை நான் அவரிடம் கையளித்திருக்கின்றேன்.

இத்திட்டத்தின் மூலம் தச்சர்கள், (ஊயசிநவெநசள) கொத்தர்கள், (ஆயளழளெ) மின்னியலாளர்கள், (நுடநஉவசiஉயைளெ)  குழாய் பொருத்துநர்கள், Pடரஅடிநசள காய்ச்சி ஒட்டுநர்கள் ( றநடனநசள ) பட வரைஞர்கள், தொழினுட்பவியலாளர்கள் ஆகியோரை நிபுணத்துவம் மிக்கவர்களாக உருவாக்க முடியும்.

இத்திட்டம் அமுலாகும் பட்சத்தில் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் வீடமைப்பு கட்டிட நிருமாண பயிற்சி நிலையங்கள் உருவாகும். அங்கு நிபுணத்துவம் வாய்ந்த வீடமைப்பு கட்டிட நிருமாணத்துறையில் பல நூற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகளை நிபுணர்களாக உருவாக்க முடியும்.

இந்த நிபுணர்கள், இயற்கைப் பேரிடர்கள், காலநிலை மாற்றம், உள்ளுர் வளங்கள், இவற்றிற்குப் பொருத்தமான கட்டிட மற்றும் வீடமைப்பு நிருமாணப் பணிகளை அமுலாக்கக் கூடியதாக இருக்கும்.

இதன் மூலம் உள்ளுர் வளங்களைக் கொண்டு இயற்கைச் சூழலுக்கு இசைவான வீடுகளை வறிய மக்களுக்கு அமைத்துக் கொடுக்க முடியும்.  இதற்கு மாகாணத்துக்கே உரித்தான சகல அதிகாரங்களும் கிடைக்கப் பெற்றால் இதனை இன்னும் சிறப்பாகச் செய்து கொள்ள முடியும்.


SHARE

Author: verified_user

0 Comments: