(க.விஜி)
மருதமுனையில் ஒலிக்கும் வாங்குச்சத்தம்(அதான் சத்தம்) துறைநீலாவணையில் ஒலிக்கின்றது. துறைநீலாவணையில் ஒலிக்கும் மணியோசை ஏன் மருதமுனையில் ஏன் ஒலிக்க கூடாது என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா .
துறைநீலாவணை ஆலையடி ஸ்ரீமுருகன் ஆலயத்தில் ஞாயிற்றுக் கிழமை (28) இடம்பெற்ற ஒன்றுகூடல் நிகழ்வில் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வானது துறைநீலாவணை கிராமத்தலைவரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராஜா அவர்களின் இணைப்பாளருமான கே.வித்தியானந்தம் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் சிரேஸ்ட ஊடகவியலாளர் செல்லையா-பேரின்பராசா,ஸ்ரீமுருகன் ஆலய பிரதம பூசகர் நல்லதம்பி பிரகாஸ், துர்க்கா கலாமன்றத்தின் தலைவரும்,நாடறிந்த எழுத்தாளரும் கவிஞருமான தினகரன்பிள்ளை புகழேந்தி,சிறுவர் நன்நடத்தை உத்தியோகஸ்தர் தி.தயாளன்,துறைநீலாவணை இளைஞர் அமைப்புத்தலைவர் அ.வேலராசு,துறைநீலாவணை முத்துமாரியம்மன் ஆலயத்தின் தலைவர் நாகப்பன் மாணிக்கராசா,மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் துறைநீலாவணை மத்தியகுழு உறுப்பினர்கள்,அமைப்பாளர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டார்கள்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராஜா பேசுகையில்:-உண்மையில் ஆலயங்கள் ஒரு சமூகத்திற்கு அத்தியாவசியமானது.எமது முதாதையர்களின் ஆலயப்பணி சாலச்சிறந்ததாகும்.மன்னர்களும்,அரசர்களும் ஆட்சி செய்த இடங்களில் கோயில்களை அமைத்து ஆட்சி செய்தார்கள்.இதன்மூலம் பண்பாட்டு, ஒழுக்க விழுமியங்கள் சிறந்ததாக காணப்பட்டது.தென்னிந்தியாவில் பழைய கோயில்கள் பேணப்பட்டு அறப்பணி மேற்கொள்ளப்படுகின்றது.வடகிழக்கு தமிழர் தாயகம் என்றாலும் புத்தர்சிலை குறைந்தபாடில்லை.புதிது புதிதாய் மூளைமுடுக்குகளில் புதிதாய் புத்தர்சிலை நாளாந்தம் முளைத்துக்கொண்டிருக்கின்றது.
நானும் து றைநீலாவணை சொந்தக்காரன்.எமது பட்டனாருடன் துறைநீலாவணை கிராமத்திற்கு விஜயம் மேற்கொண்டவன்.இங்கு ஆலயங்களில் இடம்பெறும் திருவிழாக்கள் சிறப்பானது.ஆலயங்கள் எமது பண்பாட்டை சிறப்பாக பேணிபாதுகாக்கின்றது."கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்று முதுமொழி கூறுகின்றது.எனவே இந்துக்கோயில்களை இந்துக்கள் முறையாக பேணி பாதுகாக்கப்படவேண்டும்.அதேபோன்று இந்துசமய அனுட்டானங்களை ஒவ்வொரு இந்துக்களும் படித்து தமது வாழ்வை வளப்படுத்த வேண்டும்.
துறைநீலாவணையில் என்னால் இயன்ற அபிவிருத்தி பணிகளை செய்துள்ளேன்.விதைவளுக்கும்,பொதுமக்களுக்கும் வாழ்வாதார உதவிகளை செய்துள்ளேன்.துறைநீலாவணை மேற்கு வீதி குன்றும் குழியுமாக காணப்பட்டது.இதற்கு நான்தான் முயற்சி எடுத்து கொங்கிறீட் வீதியாக நான்தான் செய்து தந்திருக்கின்றேன்.







0 Comments:
Post a Comment