பெரிய கல்லாறு மத்திய கல்லூரிக்கு ஆண் உடற்கல்வி ஆசிரியரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுங்கள் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா தெரிவித்தார்.
பெரியகல்லாறு மத்திய கல்லூரிக்கும் மட்டக்களப்பு இந்துக் கல்லூரிக்கும் இடையில் வருடாவருடம் இடம்பெற்றுவரும் “சிகரங்களின் சமர்” 7 வது சுற்றுப் போட்டி பெரியகல்லாற்றில் நடைபெற்றது இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றும் போது
இப் பாடசாலைக்கு தொடர்ச்சியாக இரண்டு வருடங்களுக்கு மேலாக ஆண் உடற்கல்வி ஆசிரியரை நியமித்து தாருங்கள் என பல தடவைகள் வேண்டியபோதும், அது நிறைவேறவில்லை. அது நிறைவேறியிருந்தால் இச் சுற்றுப் போட்டியில் மாத்திரமல்ல ஏனைய விளையாட்டுக்களிலும் சாதனை படைத்திருக்கலாம். ஆனால் இதன்போது கலந்து கொண்டு உரையாற்றிய வலயக்கல்வி பணிப்பாளர், இப்பாடசாலைக்கு விரைவில் ஒரு ஆண் உடற்கல்வி ஆசிரியரை நியமித்துத் தருவதாக தெரிவித்துள்ளார். இதற்கு எனது பாராட்டுக்கள் என அவர் இதன்போது தெரிவித்தார்.








0 Comments:
Post a Comment