SIP Academy ஏற்பாடு செய்த SIP abacus கற்கையை பூர்த்தி செய்த மாணவா்களுக்கு சான்றிதழ் விருதுகள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் New Turn Campus அனுசரனையில் அதன் பணிப்பாளா் ஜப்பாா் எம்.ஜெஸீல் தலைமையில் சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்த்தின் தவிசாளா் கலாநிதி.ஏ.எம்.ஜெமீல் அவா்களும் கௌரவ அதிதிகளாக சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளா் ஏ.எல்.எம்.சலீம், SIP Academy Lanka நிறுவனத்தின் இலங்கைக்கான முகாமையாளா் றிஷாட் றஹீம் ஆகியோரும் கலந்து கொண்டனா். வெற்றிகரமாக கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவா்கள் இங்கு சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனா்.
0 Comments:
Post a Comment