(டிலா)
கல்முனை நகர அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் தமிழ் மக்களின் விவசாய நிலங்களை அபகரிக்கும் முயற்சியை அமைச்சர் ரவூப் ஹக்கீம் கைவிட வேண்டும் என ரெலோ கட்சியின் உப தலைவரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் எதிர் கட்சியின் தலைவருமாக ஹென்றி மகேந்திரன் தெரிவித்தாா்.
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியா் சங்கம், அகில இலங்கை மக்கள் ஜனநாயக கட்சி என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த மே தின ஊர்வலமும் பொதுக் கூட்டமும் தலைவா் எஸ்.லோகநாதன் தலைமையில் கல்முனை வை.எம்.சி. கட்டிடத்தில் நடைபெற்றது இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தாா் மேலும் இங்கு உரையாற்றுகையில்,
கிழக்கு மாகாணத்திலே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிறஸ் கட்சியும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஒன்றிணைந்து ஆட்சியை நடாத்த முடியுமாக இருந்தால், வடகிழக்கிலே வாழுகின்ற தமிழ் மக்கள் தங்களுக்குள்ளே இருக்கின்ற பிரச்சினைகளை தீர்த்துக் கொண்டு தமிழ் மக்களின் அடிப்படை உரிமையாகிய இணைந்த வடகிழக்கு மாகாணத்திற்குள் ஒரு சமஷ்டி அடிப்படையிலான தீர்வை பெற்றுக் கொள்வதற்கு ஏன் முஸ்லிம் காங்கிறஸ் தலைமை தயங்கிக் கொண்டிருக்கின்றது. ஆட்சிக்கு மட்டும் கூட்டு உரிமைக்கு மட்டும் இல்லையா?
மாயக்கல்லி மலையடியில் சிறுபான்மை சமூகத்தின் காணியை பெரும்பான்மை சமூகம் சுவீகரிப்பது பிழை என்றால் கல்முனை நகர அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் நகர அபிவிருத்தி அமைச்சு தமிழ் மக்களின் விவசாய நிலங்களை அபகரிக்க நினைப்பது பிழை இல்லையா?
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிறஸ் கட்சியின் தலைவா் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இடம் ஒன்றை சொல்ல விரும்புகின்றேன்,
அம்பாரை மாவட்டத்தில் சிறுபான்மை இனமாக இருக்கின்ற தமிழா்களின் காணியை அபகரிப்பதையோ இங்கு வாழும் தமிழ் மக்களுக்கு விருப்பமில்லாமல் பறிப்பதையோ கைவிடவேண்டும்.
0 Comments:
Post a Comment