14 Dec 2016

சம்பந்தன் என்ன சொல்கின்றார் என்பதைத்தான் பிரதமரும்இ ஜனாதிபதியும் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் - அமைச்சர் துரை

SHARE
நாங்கள் நாட்டைப் பிரிக்கப்போவதுமில்லை, தமிழ் நாட்டோடுபோய் சேரப்பேவதுமில்லை. நாங்கள் இனிமேல் இந்தியாவோடு சேர்ந்து இருக்கக் கூடிய தேவை எமக்கு இல்லை எமது பேச்சுவழக்குகள் அனைத்தும் வித்தியாசமானது. இந்நிலையில்தான் பிரிவுபடாத இந்நாட்டுக்குள் உரிய தீர்வைக் கோரிநிற்கின்றோம். இந்நிலையில் தமிழ் மக்களைக் குழப்புகின்ற நடவடிக்கைகயிலும்
பலர் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் எனவே யாரும் மக்களைக் கூளப்பக்கூடாது. எமது தலைவர் சம்பந்தன் என்ன சொல்கின்றார் என்பதைத்தான் பிரதமர் ரணிவ் லிக்கிரம சிங்கவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். எனவே தமிழ் மக்கள் கவனமாக சஞ்சலப்படாமல் இருக்க வேண்டும் அனைவருக்கும் ஏற்றாற்போல் முறையான ஓர் அரசியலமைப்பு வரும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மவாட்டம் மண்டூர் கமநல விவசாயப் போதனாசிரியர் பிரிவுக்குட்பட்ட விவசாயிகளுக்கு, விவசாய உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு விவசாயப் போதனாசிரியர் ரி.கோசலரூபன் தலைமையில் மண்டூர் கமநல கேந்திர நிலையத்தில் நடைபெற்றது.

இதன்போது நீர் இறைக்கும் இயற்திரங்கள், 33 பேருக்கும், மரக்கறிகளைக் கொண்டு செல்லும் பிளாஸ்ற்றிக் கூடைகள் தலா இரண்டு வீதம் 110 பேருக்கும், ஒரு அந்தர் வீதம் 50 பேருக்கு முட்கம்பிகளும், 9 பேருக்கு தலா 50000 ரூபா வீதம் விவசாயக் கிணறு அமைப்பதற்கான காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது விவசாயிகளுக்கு மேற்படி உதவிகளை வழங்கி வைத்துவிட்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

விவசாயத்திணைக்களத்தின் மட்டக்களப்பு தெற்கு வலய உதவி விவசாயப் பணிப்பாளர் எம்.சிவஞானம், விவசாய அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தங்கவேல், தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியின் தலைவர் கி.சேயோன், உள்ளிட்ட விவசாயப் போதனாசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், விவசாயிகள் எனபலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

எமது பகுதி விவசாயிகளுக்கு தற்போழுதுதான் ஓரளவேனும் அரசாங்க உதவிகள் கிடைக்கின்றன. ஏனெனில் கிழக்கு மாகாணசபையில் ஆட்சி  அதிகாரத்தைப் பொறுப்பேற்று நாம் தற்போதுதான் ஒரு வருடமும் 9 மாதங்களும் ஆகின்றன. இந்நிலையில் தற்பொழுதுதான் எமது மக்களுக்கு உதவக்கூடிய ஒரு கசிவு கிடைத்துள்ளது. மேலும் எமது மக்களுக்கான சேவைகளை விஸ்த்தரிக்க வேண்டுமாக இருந்தால் மாகாணசபைக்கு இன்னும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

நாம் கிழக்கு மாகாணத்தில் அனைவருக்கும் சம உரிமை வழங்கி எமது உதவிகளை வழங்கி வருகின்றோம். கடந்த வருடம் கிழக்கு மாகாண அமைச்சரின் செயற்பாடுகளுக்கு வழங்கிருந்த நிதியை விவசாயிகளின் பிள்ளைகளுக்காக கற்றல் உபகரணங்களை வழங்குவதற்காகப் பயன்படுத்தியிருந்தோம். ஆனால் தற்போது அனைத்திலும் குறைகாணும் அதரசியல்வாதிகள்தான் காணப்படுகின்றார்கள். 

கடந்த காலத்தில் நாம் அதிகாரங்களை வைத்துக் கொண்டு, முற்றாக இனம், விடுதலை, தேசியம் என்பவற்றை மாத்திரம் நாம் சித்தித்துக் கொண்டிருந்தோம். விடுதலையை, போரால், சாத்வீகம், மற்றும் வெளிநாடுகளின் உதவிகளுடன் அடையலாமா என்றெல்லாம் நாம் சிந்தித்துக் கொண்டிருந்தோம். இதற்கு மக்களும் எந்தவித குறைகளுமின்றி நிறைவான ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தார்கள்.

ஆனால் தற்போழுது அனைவரும் ஒன்றிணைந்து அரசியலமைப்பை உருவாக்குவோம் என்ற நிலமைக்கு வந்துள்ளோம். இந்த நிலையிலும். எமக்கு அதிகாரம் வேண்டும், அதிகாரங்களை நாம் எதுவித தடைகளுமின்றி பாவிக்க வேண்டும், எமக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மீளப் பெறக்கூடாது.

இராணுவம், வெளிநாட்டுக் கொள்கைகளைத் தீர்மானித்தல், விமானப் போக்குவரத்து, பேரூந்து போக்குவரத்து, மாகாணங்களை எல்லாம் ஊடறுத்துச் செல்லுகின்ற நதிகள் தொடர்பான விடையங்கள், காசுகளை அச்சிடுதல், போன்றனவெல்லம் மத்திய அரசு வைத்துக் கொள்ளட்டும். மாறாக எமக்கு சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்குமு; பொலிஸ் அதிகாரம், காணியைக் கையாளுகின்ற அதிகாரம்,  மற்றுமு; விவசாயம், மீன்பிடி, கூட்டுறவு, சிறுகைத்தொழில், கல்வி, உள்ளிட்ட அனைத்தும் எமக்குக் கிடைக்கவேண்டும். 

நாங்கள் நாட்டைப் பிரிக்கப்போவதுமில்லை, தமிழ் நாட்டோடுபோய் சேரப்பேவதுமில்லை. நாங்கள் இனிமேல் இந்தியாவோடு சேர்ந்து இருக்கக் கூடிய தேவை எமக்கு இல்லை எமது பேச்சுவழக்குகள் அனைத்தும் வித்தியாசமானது. 

இந்நிலையில்தான் பிரிவுபடாத இந்நாட்டுக்குள் உரிய தீர்வைக் கோரிநிற்கின்றோம். இந்நிலையில் தமிழ் மக்களைக் குழப்புகின்ற நடவடிக்கைகயிலும் பலர் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் எனவே யாரும் மக்களைக் கூளப்பக்கூடாது. எமது தலைவர் சம்பந்தன் என்ன சொல்கின்றார் என்பதைத்தான் பிரதமர் ரணிவ் லிக்கிரம சிங்கவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். எனவே தமிழ் மக்கள் கவனமாக சஞ்சலப்படாமல் இருக்க வேண்டும் அனைவருக்கும் ஏற்றாற்போல் முறையான ஓர் அரசியலமைப்பு வரும் என அவர் மேலும் தெரிவித்தார்.























SHARE

Author: verified_user

0 Comments: