14 Dec 2016

யாழ் பல்கலைக் கழக மாணவர்களால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

SHARE
(இ.சுதா)

யாழ் பல்கலைக் கழக வவுனியா வளாக 2007, 2008 கல்வி ஆண்டு பிரயோக விஞ்ஞான பிரிவு மாணவர்களின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு செவ்வாய் கிழமை (13) சம்மாந்துறை வலய கல்வி அலுவலகத்திற்குட்பட்ட சது.றாணமடு இந்து மகாவித்தியாலயத்தில் வித்தியாலய அதிபர் கே.தியாகராஜா தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக பிரயோக விஞ்ஞான பழைய மாணவர்கள் பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது றாணமடு பிரதேசத்தில் உள்ள ஊட்டல் பிரதேச பாடசாலைகளான சரஸ்வதி வித்தியாலயம், கண்ணகி வித்தியாலயம் , அகத்தியர் வித்தியாலயம், ஸ்ரீமுருகன் வித்தியாலயம், றாணமடு இந்து மகாவித்தியாலயம், ஆகிய ஐந்து பாடசாலைகளின் மாணவர்களுக்கு சுமார் ஒரு இலட்சம் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.



SHARE

Author: verified_user

0 Comments: