15 Dec 2016

தமிழ் மக்கள் போரவையினால் ஜனவரி 21 இல் மட்டக்களப்பில் எழுக தமிழ் எழுச்சிப் பேரணி

SHARE
தமிழ் மக்கள் போரவையினால் ஜனவரி (2017) மாதம் மட்டக்களப்பில் நடாத்தப்பட இருக்கும் எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு  மக்களின் ஆதரவினைப்
பெறும் முகமாக களுவாஞ்சிகுடியில் வியாழக்கிழமை (15) துண்டுப் பிரசுர விநியோகம் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டது.

2017 ஜனவரி மாதம் 21 திகதி (சனிக்கிழமை)  இப் பேரணியை நடாத்துவதாக தமிழ் மக்கள் பேரவை திட்டமிட்டுள்ளது அந்தவகையில் துண்டு பிரசுரங்களை வழங்கி மக்களை தெளிவுபடுத்தும் முகமாக முன்னாள்  யாழ்பல்கலை கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் .சிசிதரன் தலைமையில் இந் துண்டு பிரசுர நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது

இத் துண்டு பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது….

எமது உரிமையை உரத்துக் கேட்ப்போம்! உரிமையைக் கேட்பது இனவாதமில்லைஅதனை தரமறுப்பதே இனவாதமாகும்!  உரிமைக்காக சலுகைகளை மறுத்து ஆறு தசாப்த்தங்களுக்கு மேலாக போராடி, ஆயுதப் போராட்டம் மௌனித்து ஏழு ஆண்டுகள் கடந்த நிலையிலும், சர்வதேசம் முதல் ஜெனிவா வரை எமது பிரச்சினை எதிரொலித்தும்ஸ்ரீலங்கா அரசு இனப்பிரச்சினை தொடர்பாக தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளை அங்கிகரீக்கத் தயாரில்லாத நிலையில் ஒற்றையாட்சி அரசியலமைப்பை அவர்கள் மீது திணித்து மக்கள் ஆணையை பெறுவதற்கு பகீரத பிரயத்தனம் மேற் கொண்டு வருகின்ற இந்த நிலையை முறியடிக்கவும்

இணைத்த வடக்கு கிழக்கு எமது தாயகம் என்பதனை வலியுறத்தியும், தமிழர் தேசம்   அவர்தம் தனித்துவமான இறமை,சுயநிர்ணய உரிமை என்பனவற்றின் அடிப்படையிலான ஒரு சமஷ்ரி தீர்வினை வலியுறுத்தியும் தமிழர் தாயகத்தில் தமிழரின் இனப்பரம்பலையும் பௌதீக வளங்களையும் சீர் குலைக்கும் வகையிலான திட்டமிட்ட குடியேற்றங்களை உடன் நிறுத்தக் கோரியும், யுத்தக்குற்றங்கள், இன்படுகொலைகளுக்கான சர்வதேச விசாரணை வேண்டும் என உலகிற்கு உரத்துச் சொல்லவும்,


விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்யக் கோரியும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பொறுப்புக் கூறலை துரிதப்படுத்தவும், தமிழர் தாயகத்தில் சிங்கள பௌத்த மயமாக்கலை உடன் நிறுத்தக் கோரியும், போரினால் பாதிக்ப்பட்ட விதவைப் பெண்களின் மறுவாழ்வை வலியுறுத்தியும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள் குடியேற்றத்தினை துரிதப்படுத்தக் கோரியும், போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கிளில் சமச்சீரற்ற அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு எதிராகவும், கிழக்கிலும் வடக்கிலும் உள்ள பல்கலைக் கழகங்கள் உள்ளிட்ட தாயகத்தில் உள்ள ஏனைய உயர்கல்வி நிறுவனங்களில் பேரின வாதிகளினால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள ஒடுக்கு முறைகளுக்கு எதிராகவும் இதுதான் தரணம் மௌனத்கை கலைத்து உணர்வோடு ஒன்றிணைவோம் என அப்பிரசுத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  







SHARE

Author: verified_user

0 Comments: