15 Dec 2016

மாணவிகளுக்கு முதலுதவியூடான தலைமைத்துவப் பயிற்சி

SHARE
மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா மகளிர் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் எஸ்.பிரியதர்சனின் வேண்டுகோளுக்கிணங்கவும் மட்டக்களப்பு கல்வி வலைய உடற்கல்வி உதவிப் பணிப்பாளர் எஸ்.லவக்குமாரின் ஏற்பாட்டிலும் இலங்கை செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்பு மாவட்டக்கிளையினதும்  மட்டக்களப்பு
பெண்கள் லயன்ஸ் கழகத்தினதும் அனுசரனையுடன் கல்லடி விவேகானந்தா மகளிர் பாடசாலை மாணவிகள் மற்றும் மட்டக்களப்பு மகாஜனாக் கல்லூரி மாணவிகள் இருபது பேருக்கு “முதலுதவியூடான தலைமைத்துவப் பயிற்சி  புதன் மற்றும் வியாழன் (14, 15) ஆகிய இருநாட்களும் நடைபெற்றது.

இப்பயிற்சி இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் கேட்போர் கூடத்தில் தலைமைப்பயிற்றுனர் த.வசந்தராஜாவின் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மட்.கல்லடி விவேகானந்தா பாடசாலை ஆசிரியை திருமதி.டானியல், மட்.மகாஜனக்கல்லூரி ஆசிரியை திருமதி. விநோதன், மட்டக்களப்பு பெண்கள் லயன்ஸ் கழகத்தின் தலைவி திருமதி.பாரதி கெனடி, கல்லடி விவேகானந்தா பெண்கள் பாடசாலையின் அபிவிருத்திச் செயலாளர் எஸ்.பிரியதர்சன் முதலானோர் கலந்துகொண்டிருந்தனர்.


இதன் ஆரம்பநாள் நிகழ்வில் கலந்து கொண்டு மட்டக்களப்பு பெண்கள் லயன்ஸ் கழக தலைவி திருமதி பாரதி கெனடி கருத்துத் தெரிவிக்கையில்…

பாடசாலை மாணவிகளின் நலன் கருதியே தங்களது கழகம் இருநாட்கள் பயிற்சியிலும் கலந்து கொள்ளும் மாணவிகளுக்கு சுத்தமான மதிய உணவு வழங்கி உதவுவதற்கு முன்வந்ததாகவும் இவ்வுதவி தங்களது கழக உறுப்பினர்களின் தனிப்பட்ட நிதியுதவியினால் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார். 

தான் கிழக்குப் பல்கலைக் கழகத்தில் ஒரு சிறந்த விரிவுரையாளராக இருப்பதற்கு காரணம் பாடசாலைக் கல்வி மாத்திரமல்ல இத்தகைய தலைமைத்துவப் பயிற்சிகளும் தனது பாடசாலைக் காலத்தில் தான் பெற்றமையும் ஒரு காரணமாகும் எனவும் இத்தகைய சந்தர்ப்பங்கள கிடைக்கும் போது அவற்றை முழுமையாகப் பயன்படுத்தி இப்பயிற்சியைப் பெறும் மாணவிகளும் தன்னைப் போன்று வருவதற்கு தான் வாழ்த்துவதாகவும் கூறினார்.   







SHARE

Author: verified_user

0 Comments: