21 Jan 2016

கிழக்கு மாகாண முதலமைச்சர் கர்நாடக அமைச்சர்க ளைச் சந்த்தித்துப் பேச்சு

SHARE
கடந்தவாரம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் கர்நாடக அமைச்சர்களான  கே .ஜே .ஜோர்ச்இஎஸ் .ஆர்.பார்ட்டில் ஆகியோரை சந்தித்தார் .
கிழக்கு மாகாணத்தின் முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பாகவும் கிழக்குமாகாணத்தின் நிலவரம் மற்றும் இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பாகவும் கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டனர்.

திட்டமிடல் புள்ளி விபரவியல்  இதகவல் தொழிநுட்பம் மற்றும் விஞ்ஞான  தொழில்நுட்பம்  மற்றும் தொழில்நுட்ப  அமைச்சர் பார்ட்டில் கிழக்கில் தகவல் தொழிநுட்ப நிலையம் ஒன்றையும் அமைக்கவுள்ளதாக அவர் கூறினார் .

பெங்களூர் அபிவிருத்தி நகர திட்டமிடல் அமைச்சர் கே .ஜே .ஜோர்ச் கிழக்குமாகனத்தில் கைத்தொழில் பேட்டை ஒன்றை அமைக்கவுள்ளதாக முதலமைச்சரிடம் உறுதியளித்தார் .

கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு முன் வந்துள்ள இந்த அமைச்சர்களின் உறுதி மொழிக்கு நன்றி தெரிவித்த நசீர் அஹமட்  எதிர்வரும் 28 ஆம் திகதி கொழும்பு கலதாரி கோட்டலில் நடை பெறவுள்ள கிழக்கின் முதலீட்டு அரங்கிற்கு  வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.இதனை ஏற்று இரு கர்நாடக அமைச்சர்களும் நடை பெறவுள்ள கிழக்கின் முதலீட்டு அரங்கிற்கு தயாராகவுள்ளோம் என முதலமைச்சர் ஹபீஸ் நசீர் அஹமட்டிடம் கூறினார். 




SHARE

Author: verified_user

0 Comments: