மண்முனை பாலத்திற்கு
அருகாமையில் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மில்லி லீட்டர் கோடா 67,500 மில்லி லீட்டர்
கசிப்பையும், கைப்பற்றல் இரு நபர்களும் கைது.
மண்முனை மாவட்டம் மண்முனை பாலத்திற்கு அருகாமையில் உள்ள தீவுப் பகுதியில் உற்பத்தி செய்து கொண்டிருந்த ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மில்லி லீட்டர் கோடா, 67,500 மில்லி லீட்டர் கசிப்பு போன்றவற்றை கொக்கட்டிச்சோலை பொலிஸார் இன்று வியாழக்கிழமை(12.03.2026) மீட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸா தெரிவித்தனர்.
கொக்கட்டிச்சோலை பொலிஸ்
பிரிவுக்குட்பட்ட மண்முனை பாலத்தருகில் அமைந்துதுள்ள தீவு பகுதியில் கசிப்பு உற்பத்தியில்
ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது இரு நபர்களை சம்பவ இடத்தில் வைத்து கைது செய்ததோடு, இரண்டு
பரள்கள் மற்றும் இரண்டு கலன்களில் உற்பத்தி செய்து வைத்திருந்த நிலையில் கொக்கட்டிச்சோலை
பொலிஸார் மீட்டுள்ளனர்.
மேலும் எரிவாயு ஒன்று,
கேஸ் அடுப்பு ஒன்று, பைப் 02 என்னவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கொக்கட்டிச்சோலை பொலிஸ்
விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக கொக்கட்டிச்சோலை பொலிசார்
நடாத்திய திடீர் சுற்றி வளைப்புகளின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது 26, மற்றும்
36 வயதுடைய நபர்களை கைது செய்துள்ளனர். இது தொடர்பாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேலதிக
விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
0 Comments:
Post a Comment