(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை கோமரங்கடவெல பொலிஸ் நிலையத்திற்கு காட்டு யானைகளின் தொல்லைகள் காரணமாக அதிகளவில் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119 க்கு அதிகளவில் முறைப்பாடுகள் வருவதாக கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.
காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதினால் கோமரங்கடவெல பிரதேசத்திலுள்ள மக்கள் பயத்துடன் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அதிகளவில் முறைப்பாடுகள் தெரிவிக்கின்றனர்.அம்முறைப்பாடு கள் தமக்கு கிடைத்தவுடன் ஒரே இரவில் பல பகுதிகளுக்கு சென்று யானைகளின் நடமாட்டை அவதானிக்க வேண்டிய நிலை காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதே வேளை காட்டு யானைகளின் தொல்லை குறித்து பல அரசியல் வாதிகளிடமும் -அரச அதிகாரிகளிடமும் பல தடவைகள் தெரிவித்தும் எதுவித நடவடிக்கையும் எடுக்க வில்லை எனவும் அப்பகுதியிலுள்ள மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து கோமரங்கடவெல பிரதேச செயலாளர் எஸ்.எம்.சி.சமரகோனிடம் வினவியபோது கடந்த வருடத்தை விடவும் தொல்லைகள் குறைவாக காணப்படுவதாகவும் இவ்வருடம் அபிவிருத்தி திட்ட வேலைத்திட்டத்தில் யானை மின் வேலி அமைப்பதற்கு கோமரங்கடவெல -மற்றும் கிவ்லகடவெல பகுதிகள் தெரிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அவ்வேளைகள் முடிவடைந்தால் காட்டு யானைகளின் தொல்லைகளிலிருந்து தப்ப முடியும் எனவும் கூறினார்

0 Comments:
Post a Comment