21 Jan 2016

க.பொ.த. உயர்தர பரீட்சையில் சத்தியடைந்த மாணவர்களுக்கான புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு

SHARE
 (கங்கா) 

க.பொ.த. உயர்தர பரீட்சையில் சத்தியடைந்த மாணவர்களுக்கான புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு நாளை (23) மட்டக்களப்பில் நடைபெறுகின்றது.
சிவகாமி பவுண்டேசன் ரெயின்போ பவுண்டேசன் இணைந்து முன்னெடுக்கும் கிழக்கு மாகாணத்திலிருந்து மருத்துவம் பொறியியல் சட்டம் ஆகிய துறைகளுக்கு பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு-2016 நாளை (23) சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு மட்/சிவானந்தா தேசிய பாடசாலை மண்டபத்தில் நடைபெற உள்ளன.

இந்த நிகழ்விற்கு சங்காரவேல் பவுண்டேசன் அமைப்பின் தலைவர் சோ.சிவலிங்கம் தலமை தாங்குவதுடன் மட் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் பிரதம அதிதியாகவும் ரெயின்போ பவுண்டேசன்(லண்டன்) ஸ்தாபகர் கே.நிர்மலன் சிறப்பு அதிதியாகவும் பட்டிருப்பு கல்வி வலய வலயக் கல்விப் பணிப்பாளர் என்.புள்ளநாயகம் மட்டக்களப்பு கல்வி வலய வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் கல்குடா கல்வி வலய வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிகிருஸ்ணராஜா மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய வலயக் கல்விப் பணிப்பாளர் கே.சத்தியநாதன் மூதூர் கல்வி வலய வலயக் கல்விப் பணிப்பாளர் செல்வி.ஏ.கனகசூரியம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் 

மூதூர் வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்  (கல்வி முகாமைத்துவம்) மட்டக்களப்பு மேற்கு வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் (கல்வி அபிவிருத்தி) கே.கரிகராஜ் சங்காரவேல் பவுண்டேசன் (லண்டன்) ஸ்தாபகர் எஸ்.சுகுமார் ஆகியோர் சேவை நிலைய அதிதிகளாகவும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். 

SHARE

Author: verified_user

0 Comments: