தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் இந்தியாவிற்கு பயணமாகியுள்ளார்.
இந்தியாவின் இந்து மக்கள் கட்சி நடாத்தும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு கலந்து கொள்வதற்காகவே அவர் அங்கு சென்றுள்ளார்.
இவர் இந்து இளைஞர் பேரவை தலைவருமாகவும் செயற்பட்டுவருகின்றார்.
இந்நிலையில் அங்கு விசேட தேவையுடைய ஒருவருக்கு துவிச்சக்கர வண்டி ஒன்றையும் வழங்கி வைத்தார்.
அத்தோடு இன்று மாலை நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விஜர்சன ஊர்வலத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அதனை ஆரம்பித்து வைத்தார்.

0 Comments:
Post a Comment