வாழைச்சேனை கடதாசி ஆலையினை கைத்தொழில் பேட்டையாக உருவாக்க பிரதமர் ரணில் விக்ரம சிங்க அனுமதி வழங்கியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்ரம சிங்கவுடன் நடாத்திய பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதனால் வாழைச்சேனை கடதாசி ஆலையினை கைத்தொழிற்பேட்டைக்குள் உள்வாங்கி அதன் மூலம் கடதாசி ஆலையில் பணிபுரியும் சகல ஊழியர்களும் உள்வாங்கப்பட்டு மீண்டும் வழமையான முறையில் அதன் பணிகள் ஆரம்பமாகும் என்றும் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment