நாடாளுமன்றத்தில் சட்டம் பற்றி அறிவூட்டுவதற்கான நடவடிக்கை எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என்று முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
காத்தான்குடியில் நேற்று புதன்கிழமை (12) நடைபெற்ற 'நாடாளுமன்றத்தில் ஹிஸ்புல்லா' எனும் நூல் வெளியீட்டு வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
வெறுமனே வீதிகள், கட்டடங்கள், வீடுகள் அமைப்பதல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு வருடத்துக்கு சட்டம் பற்றி அறிவூட்டல் செய்யும் நடவடிக்கை இடம்பெறவுள்ளது.
முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது 20 பேர் இருக்கின்றனர். இந்த எண்ணிக்கை குறையாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.
எனது 19 வருட நாடாளுமன்ற சேவைக்காலத்தில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறந்த சேவையாற்றியுள்ளதுடன் சிறுபான்மை சமூகங்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளேன் என்றார்.
0 Comments:
Post a Comment