வாக்களிப்பதன் முக்கியத்துவத்தினையும் வாக்குகள் சிதறடிக்கபடாமல் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் ஞா.ஸ்ரீநேசன் வாக்களர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.
முன்னாள் பிரதிக் கல்வி பணிப்பாளரான ஞா.ஸ்ரீநேசன் அவர்களின் தேர்தல் பரப்புரை கூட்டம் நேற்று புதன்கிழமை மாலை செங்கலடி கணபதி நகரில் இடம்பெற்றது.
இப் பொதுக்கூட்டத்தில் பெருந்திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் உரையாற்றிய திரு.ஞா . ஸ்ரீநேசன் அவர்கள்,
வாக்களிப்பதன் முக்கியத்துவத்தினையும் வாக்குகள் சிதறடிக்கபடாமல் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் எனவும் வாக்களர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.
மேலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மாத்திரமே தமிழர்களின் மன உணர்வுகளின் எதிரொலியாகத் திகழ்ந்து வருகின்றது.
தேர்தல் காலங்களில் தமிழர்களின் வாக்குகளை சிதறடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் பல சுயேச்சைக் குழுக்கள் தோன்றுகின்றன.
இவற்றுக்கு அளிக்கும் வாக்குகள் ஒவ்வொன்றும் எமக்குரிய பிரதிநிதித்துவத்தை இழக்கும் துர்ப்பாக்கிய நிலைக்குள் எம்மைத் தள்ளி விடும்.
எனவே வாக்குகள் வீணடிக்கப்படுவதை நாம் ஒன்றிணைந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிப்பதன் மூலம் தடுக்க முடியும் எனவும் வாக்களிக்கத் தகுதி உள்ள அனைவரும் வாக்குரிமையை ஒழுங்கான முறையில் பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இலக்கம் 5 இல் போட்டியிடும் எனக்கும் உங்களது வாக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனப் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்தார்
0 Comments:
Post a Comment