எதிர்வருகின்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், மட்டக்களப்பு மாவட்டத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ள 8 உறுப்பினர்களில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், ஆகியோர்கள் தற்போதைய நிலையில் உத்தியோக பூர்வமாக, தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஏனைய 5 உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் இன்னும் ஓரிரு தினங்களில் வெளியிடப்படும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பிளனர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.
கடந்த நடாளுமன்றத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 3 உறுப்பினர்களை இம்மாவட்ட மக்கள் தேர்ந்தெடுத்திருந்தனர், இம்முறையும் 3 ஆசனங்களைவிட அதிகமாக ஆசனங்களைப் பெறுவதற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிப்பார்கள் என்பதில் எதுவித சந்தேகமுமில்லை எனவும் அவர் மெலும் தெரிவித்தார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி
மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது இவற்றுக்காக வேண்டி சரியான தகுந்த வேட்பாளர்களை தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ள மட்டக்களப்பு வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் நாளை புதன் கிழமை (08) மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.
என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
எதிவருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி எவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தில், செயற்படவுள்ளது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியிடம் செவ்வாக் கிழமை (07) தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் தெடர்ந்து கருத்து தெரிவிக்கையில்….
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்த எமது கட்சியை அக்கூட்டமைப்பிலிருந்து விலக்கியுள்ளதாக அக்கூட்டமைப்பில் அங்கம் வகிப்பவர்கள் கூறுகின்றார்கள். ஆனால் எமது கட்சியை தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து நீக்கி விட்டதாக உத்தியோக பூர்வமாக இதுவரையில் எமக்கு அறிவித்தல் கிடைக்கிவில்லை.
இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து எமது கட்சிசார்பாக எதிர் வருகின்ற நாடாளுமன்ற பொதுத் தேர்திலில் பேட்டியிடுவதற்குரிய சந்தர்ப்பம் கிடைக்கப் பெறாமலுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டுதான் எமது கட்சி எதிர் வருகின்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தனித்து செயற்படவுள்ளது. எனத் தெரிவித்த அவர்……
தமிழர் விடுதலைக் கூட்டணிதான் தமிழருடைய கட்சி என்ற நோக்கததுடன் செயற்பட்டவர்தான் தந்த செல்வா. 1972 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழரசுக் கட்சி இனிமேல் இயங்காது, என்ற கோசத்துடனும், தமிழரசுக் கட்சியை மேலேங்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கனவிலும்கூட நினைக்காமல் தந்தை செல்வா செயற்பட்டு வந்தார்.
தந்தை செவ்வா இறக்கும்போதும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராக இருந்தபடியேதான் இறந்தார். தந்தை செல்வாவின் ஞாபகார்தத தூபியிலும்கூட இன்றுவரை தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னமான உதய சூரியன் சின்னம்தான் பொறிக்கப் பட்டுள்ளது.
1977 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது தழிழர் விடுதலைக் கூட்டணியே தவிர தமிழரசுக் கட்சி அல்ல தந்தை செல்வா இறக்க முன்னர் ஜி.ஜி.பொன்னம்பலத்தையும், தொண்டமானையும் கொணர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்களாக்கி விட்டுத்தான் இனிமேல் தமிழர்களின் தலைவர்கள் இவர்கள்தான் என அறிமுகமாக்கிவிட்டுத்தான் இறந்தார்.
தந்த செல்வாவின் பிரேதமும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதய சூரியன் கொடி போர்த்தித்தான் எரிக்கப்பட்டது. இந்த வரலாற்றுச் சான்றை எமது மக்கள் அறிந்துகௌ;ள வேண்டும்.
தந்தை செவ்வா இறந்து 26 வருடங்களுக்குப் பின்னர்தான் மாவை. சேனாதிராசா தமிழரசுக் கட்சியினை மீண்டும் உருவாக்கினார்.
எமது மக்களுக்காக இதுவரையில் தமிழரசுக் கட்சியில் இருந்து யாரும் உயிர் நீக்கவில்லை, ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்துதான் நீலம் திருச்செல்வம், அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், சிவபாலன், போன்ற தலைவர்கள் இறந்துள்ளார்கள், தமிழர் விடுதலைக் கூட்டணியின் காலத்தில் தான் ஆயுதப்போராட்டம், சாத்வீகப் போராட்டம் என்பன ஆரம்பிக்கப்பட்டன. மாறாக இலங்கைத் தமிழரசுக் அகட்சியிக் காலத்தில் இவை எதுவும் நடக்கவில்லை இதனை எமது மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் நடைபெற்ற சாத்வீகப் போராட்டங்களில் உயிரிழந்தவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியினரே தவிர இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் அல்ல என்பதை தெரிவித்துக் கொள்ளவிரும்புகின்றேன் எனவும் அவர் மேலும் தெரிவத்தார்.
என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் றவூப். ஏ.மஜீத்
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் எதிர் வருகின்ற நடாளுமன்றத் தேர்தலில் போட்டியிவுள்ள வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பணி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் றவூப். ஏ.மஜீத் தெரிவித்தார்.
நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தல் தொடர்பில் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தாரர்.
இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்ககையில்….
இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தகுந்த வேட்பாளர்களைக் களமிறக்கி மக்களைத் தெழிவூட்டி எமது கட்சி எமது கட்சி பிரச்சாரத்தில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளது. இருந்த போதிலும் எமது சட்சி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விபரம் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும், எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பளார் அ.சசிதரன்
இவ்வேளையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் வெகு விரைவில் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பளார் அ.சசிதரன் தெரிவித்தார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேதலில் ஐக்கியதேசிக் கட்சியிய் சார்பில் யோட்டியிடவுள்ள மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்கள் தொடர்பில் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவிதார்.
இருந்தபோதிலும் கடந்த காலங்களைப் போலல்லாமல், இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் தமது கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்றும் எனவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

நாம்திராவிடர் கட்சியின் தலைவர் க.மேகன்
இது இவ்வாறு இருக்க மட்டக்களப்ப மாவட்டத்தில் இவ்வருடம் பதிதாக உருவாக்கம் பெற்றுள்ள நாம் திராவிடர் எனும் கட்சி எதிர் வருகின்ற பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சையாகப் பொட்டியிடுவதற்காக வேண்டி திங்கட் கிழமை (07) கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக நாம்திராவிடர் கட்சியின் தலைவர் க.மேகன் தெரிவித்தார்.
தமது கட்சியின்சார்பில் சுயேட்சையாகப் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்களும். தேர்தல் விஞ்ஞாபனமம் செவ்வாய்க்கிழமை (07) வெளியிடப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment