மட்டக்களப்பு களுதாவளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு இன்று புதன் கிழமை (08) இரவு கும்பம் வைத்தலுடன் ஆரம்பமாகின்றது.
தொடர்ந்து 9 ஆம் திகதி வியாழக் கிழமை விசேட பூஜை ஆராதனைகளும், 10 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை நெய்விளக்குப் பூஜையுடன், திருக்கும்ப ஊர்வலமும், தீக்கட்டடை எழுந்தருளல் நிகழ்வும் நடைபெறும்,
11 சனிக் கிழமை மாலை 6 மணிக்கு தீமிதிப்பு இடம்பெற்று தவநிலையும் இடம்பெறும், 12 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை வட்டுக்குற்றும் நிகழ்வு இடம்பெற்று, காவடி எடுத்தலுடன், விநாயகப்பானை எழுந்தருளற் பண்ணல் நிகழ்வும், இடம்பெற்று 13 ஆம் திகதி திங்கட் கிழமை காலை திருப்பள்ளையத்துடன், திருக்குளித்தி இடம்பெற்று கும்பம் சொரிலுடன் திருச்சடங்ககு நிறைவு பெறவுள்ளது.
0 Comments:
Post a Comment