19 Jun 2015

இனமத வேறுபாடின்றி சகல மக்களுக்கும் சரியான சேவைகள் சென்றடைய உன்னிப்பாக நடவடிக்கை

SHARE

கிழக்கு மாகாண சபையின் ஜூன் மாதத்துக்கான சபை அமர்வு (16)  காலை 9.30 மணிக்கு சபைத் தவிசாளர் சந்திரதாஷ கலபதி தலைமையில் சபை மண்டபத்தில் ஆரம்பமானது.
மாகாண சபை உறுப்பினர் ஆர்.துரைரட்ணம் முன்வைத்த பிரேரணை தொடர்பில் எதிர்கட்சி உறுப்பினர் சந்திரகாந்தன் பிள்ளையான் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்  கிழக்கில் இன்று நல்லாட்சி மலர்ந்திருக்கிறது. இந்நல்லாட்சியில் என்ன நடைபெறுகிறது, என்ன விடயங்கள் நடைபெறவிருக்கிறது, என்பன தெளிவாக அறிவிக்கப்பட்டே அனைத்து செயல்களும் இடம்பெறும்.

கடந்த ஆட்சியில் நடந்த அநியாயங்கள் இன்றைய ஆட்சியில் இடம்பெற யாருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது. இனமத வேறுபாடின்றி சகல மக்களுக்கும் சரியான சேவைகள் சென்றடைய இன்றைய கிழக்கின் ஆட்சியில் இணைந்திருக்கும் கூட்டு மிகவும் தெளிவாக இருக்கும்.

அதற்காக மிகவும் உன்னிப்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அனைத்து செயற்பாடுகளும் சபைக்கும் மக்களுக்கும் சரியான முறையில் அறிவிக்கப்படும் அதன் பின்னர் மக்கள் தெரிந்து கொள்வார்கள் எங்கே என்ன நடைபெற்றுள்ளது என்று என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: