இம்முறை நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியில் ஆதிகூடிய 110 புள்ளிகளைப்பெற்று மாகாணத்தில் முதலிடத்தைப்பெற்று மட்.களுதாவளை மகாவித்தியாலயம் சாதனை படைத்தள்ளது.
இம்முறை கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றிய அனைத்து பாடசாலைகளுடன் கடுமையான போட்டியில் ஈடுபட்டே இந்த சாதனையை புரிந்துள்ளது. மேற்படி விளையாட்டுப் போட்டியில் 11 முதலாம் இடங்களையும் 10 இரண்டாம் இடங்களையும், 09 மூன்றாம் இடங்களையும் பெற்றுக் கொண்டதன் அடிப்படையில் ஆண்கள் 64 புள்ளிகளையும் பெண்கள் 46 புள்ளிகளையும் பெற்றுக் கொடுத்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் பட்டிருப்பு கல்வி வலயம் முதலாம் இடம்
இதே வேளை கிழக்கு மாகாணத்தில் அதிகூடிய புள்ளியான 264 புள்ளிகளைப் பெற்று மட்.பட்டிருப்பு கல்வி வலயம் முதாலாம் இடத்தைப் பெற்றுள்ளது. இந்த சாதனையை நிலை நாட்டுவதற்கு மட்.களுதாவளை மகாவித்தியாலயம் பெற்றுக் கொடுத்த புள்ளிகள் மிகவும் உறுதுணையாய் அமைந்துள்ளது.
மற்றும் வலயத்தினை முதல் நிலைக்கு கொண்டு வருவதற்காக கனிசமான பங்களிப்புச் செய்த பாடசாலை வரிசையில் செட்டிபாளையம் மகாவித்தியாலயம் 84 புள்ளிகள்இ மண்டூர் 13 விக்னேஸ்வரா வித்தியாலயம் 46 புள்ளிகளையும்இ வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயம் 11 புள்ளிகளையும் ஏனைய பாடசாலைகள் 13 புள்ளிகளையும் பெற்றுக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
0 Comments:
Post a Comment