மட்டக்களப்பு மாவட்ட மக்களிடம் தமது கட்சி விடுத்த கோரிக்கைக்கு இணங்க இன்று வெள்ளிக்கிழமை (22) மட்டு மாவட்டம் தழுவிய ரீதியில் அனுஸ்ட்டிக்கப்படும் ஹர்த்தால் வெற்றியளித்துள்ளது. இது எமது கட்சியின் கன்னி முயற்சிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். என நாம் திராவிடர் கட்சியின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்தார்.
இது தொடர்பிர் அவர் மேலும் தெரிவிக்கையில்…
புங்குடு தீவில் பாடசாலை மாணவி ஒருவர் பரிதாபகரமான முறையில் துஸ்ப்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார், இச்சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு வாழ் மக்களிடம் எமது கட்சி இன்று பூரண ஹர்த்தாலை அனுஸ்ட்டிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தது. அதற்கமைவாக இன்று கர்த்தால் அனுஸ்ட்டிக்கப் படுகின்றது.
தமிழனுக்கு எங்கெங்கலாம் அனியாயம் நடைபெறுகின்றதோ அவற்றைத் தட்டிக்கேட்பதற்கும் தழிரருக்காக குரல் கொடுப்பதற்கும் எமது கட்சி பின்னிற்காது எனவும் நாம் திராவிடர் கட்சியின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் மேலும் தெரிவித்தார்
0 Comments:
Post a Comment