23 May 2015

முடிச்சுக்கோரைப் புற்களின் தாக்கம் அதிகரிப்பு

SHARE

 மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப் பகுதியான போரதீவுப் பற்று பிரதேசத்தில்  தற்போது செய்கை பண்ணப் பட்டுள்ள சிறுபோக நெற்செய்கையில் முடிச்சுக்கோரைப் புற்களின் தாக்கம் அதிகரித்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

போரதீவுப் பற்று பிரதேசத்தில் மண்டூர், வெல்லாவெளி, மற்றும் பழுகாமம் ஆகிய மூன்று கமநல பரிவுகளை உள்ளடக்கியதாக இவ்வருடம் சுமார் 16000 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட வயல் நிலங்களில் சிறுபோக நெற் செய்கை மேற்கொள்ளப் பட்டுள்ளன.

எது எவ்வாறாயினும் நெல் விதைத்து 7 நாட்களுக்குள் களைகளைக் கட்டுப்படுத்தக் கூடிய சிறந்த களை நாசிநிகளை விவசாயிகள் தெரிவு செய்து விசிறியிருந்தால் தற்போது கோரைப் புற்களின் தாக்கம் ஏற்பட்டிருக்காது என கமநல அபிவிருத்தி பெரும்பாக உத்தியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர். 






SHARE

Author: verified_user

0 Comments: