29 Apr 2015

தமிழ் தேசியக் கூட்டமைப்பை விமர்சனம் செய்வதற்கு பலர் உருவெடுத்துள்ளார்கள் - அடைக்கலநாதன்.எம்.பி.

SHARE
தற்போதைய காலகட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை விமர்சனம் செய்வதற்கு பலர் உருவெடுத்துள்ளார்கள். தனிப்பட்டவர்களின் கருத்துக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒருபோதும் பலயீனமாக்காது. இந்நிலையில் தமிழ் தேசிக் கூட்டமைப்பு எமது மக்களை விலைபேச நினைத்தால் எமது கூட்டமைப்பு மஹிந்த ராஜபக்ச அரசில் ராஜ போக வாழ்க்கை வாழ்ந்திருக்க முடியும். எமது மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படல் வேண்டும் என்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாரிடமும் விலைபோகாமல் பயணித்துக் கொண்டிருக்கின்றது.

என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநான் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனின் பொது மக்கள் தொடர்பகம் சனிக் கிழமை (25) மட்டக்களப்பு ஒலிவ் லேனில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தர்.

இதன்போது அவர் nமேலும் கருத்து தெரிவிக்கையில்…..

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எமது தமிழ் மக்களால் உரவாக்கப்பட்ட ஒரு வலுவான அமைப்பாகும். இந்த அமைப்பு பல துன்ப துயரங்களைச் சந்தித்தது. இந்தக் கூட்டமைப்பை உருவாககுவதற்கு கிழக்கு மாகாணத்தின் ஊடகவியலாளர்கள் பாலமாக அமைந்திருந்தார்கள். இவ்வாறுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கம் பெற்றது.

ஆயுதப் போராட்டம் மௌனிக்கப் பட்டதன் பின்பு தமிழ் மக்களின், பிரச்சனைகளுக்குரிய தீர்வினை எட்டுவதற்குரிய சுமையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு சுமந்தது.

கடந்த அரசாங்கத்தில் எமது கூட்டமைப்பு இனப்பிரச்சனைக்குரிய தீர்வினை எட்டுவதற்கு பல பேச்சுறுவாத்தைகளை நடாத்தியிருந்தது. அதற்கு தீர்வு கிடைக்காத நிலையில் இன அழிப்புச் செய்த அந்த அரசை வீட்டுக்கு அனுப்பிவதற்காக வேண்டி வடகிழக்கு மக்கள் புதிய ஜனாதிபதியை ஆதரித்திருந்தர்கள். எமது மக்களை அழித்த முன்னாள் ஜனாதிபதிக்கு எமது மக்கள் வழங்கி தீர்ப்பே அது.

ஆனால் தற்போதைய ஜனாதிபதி நல்லவராக இருந்தாலும் இனத் துவேசத்தைக் கக்குகின்ற அரசியலவாதிகள் தற்போது வரைக்கும் தென்னிலங்கையில் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

அற்ப எதிர்க் கட்சித் தலைவர் பதவியை எமக்குக் கொடுப்பதற்கே எதிர்ப்பு, தினேஸ் குணவர்த்தன போன்றவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை விடுதலை புலிகளின் வாரிசுகள் எனக் கூறிக் கொண்டு இனத் துவேசத்தைக் கக்குகின்றார்கள்.

இராணுவம் ஆக்கிரமிப்புச் செய்துள்ள எமது மக்களின் நிலங்களை விடுவிக்கின்றது எனக்கூறிக் கொண்டு தற்போதும் நில ஆக்கிரமிப்புக்களைத்தான் செய்கின்றாரகள்.

இந்த அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்த அடிப்படையில் தற்போதைய ஜனாதிபதியின் சிந்தனை நல்லதாக அமைந்தாலும்  அவற்றை நடைமுறைப் படுத்துகின்றவர்கள் இனத்துவேசத்த்தைக் கக்குகின்றவர்களாக இருக்கின்றார்கள் என்பதை தற்போதைய நிலையில், நாங்கள் சர்வதேசத்திற்கு எடுத்தியபுவதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் தற்போதைய காலகட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை விமர்சனம் செய்வதற்கு பலர் உருவெடுத்துள்ளார்கள். தனிப்பட்டவர்களின் கருத்துக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒருபோதும் பலயீனமாக்காது. இந்நிலையில் தமிழ் தேசிக் கூட்டமைப்பு எமது மக்களை விலைபேச நினைத்தால் எமது கூட்டமைப்பு மஹிந்த ராஜபக்ச அரசில் ராஜ போக வாழ்க்கை வாழ்ந்திருக்க முடியும். எமது மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படல் வேண்டும் என்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாரிடமும் விலைபோகாமல் பயணித்துக் கொண்டிருக்கின்றது.

எமது மக்களின் விடுதலை என்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் சுமத்தப் பட்டிருக்கின்றது. எது எவ்வாறாயினும் தென்னிலங்கை அரசியல் வாதிகள் தமிழ் மக்களுக்குரிய தீர்வினை தரமாட்டார்கள் என்ற விடையத்தை சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்குட்படுத்துவதற்கு எமக்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பிரச்சனைகள் இருக்கின்றனதான் அனால் எமது கொள்கையில் நாம் உறுதியாக இருக்கின்றோம். நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வலு இழக்கச் செய்ய வில்லை. ஆனால் இந்த நாட்டின் ஜனாதிபதியை மாற்றக் கூடிய மாபெரும் சக்தியாக எமது வட கிழக்கு மக்கள் உள்ளார்கள் என்பதை இந்த நாட்டுக்கே பறைசாபற்றியுள்ளோம்.

அதுபோல் எதிர் காலத்தில் உருவாகும் புதிய அரசாங்கத்தையும் தீர்மானிக்கும் சக்தி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குத்தான் இருக்கும் என்பதை நான் இப்போதே தெரிவித்துக் கொள்கின்றேன். எதிர் வருகின்ற பொதுத் தேரத்தலில் எந்தக் கட்சியும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறமாட்டாது. எனவே நாடாளுமன்றத்தில் மூன்றில் இருண்டு பெரும்பான்மையை எந்தக் கட்சிக்கும் கிடைக்காத நிலையில் புதிய அரசை நிர்ணயிக்கும் சக்தி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குத்தான் வரும். என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை.

இவை அனைத்தற்கும் எமது மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மெமேலும் வலுச்சேர்க்க வேண்டும். தற்போது பலர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தேர்தலில் Nhபட்டியிடுவதற்கு முந்வந்துள்ளார்கள்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு அரசியற் கட்சியாகப் பதிவு செய்யும் நிலை நிற்சயமாக ஏற்படும் அற்கு முன்பு தமிழ் தேசிகு கூட்டமை;பபில் அங்கத:துவம் வகிக்கின்ற அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைற்து புரிந்துணர்வு ஒப்பந்த்தின் அடிப்படையில் செயற்படுவதற்குத் தீர்மானித்துள்ளோம். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அடுத்தவராம் நடைபெறவள்ளது.

தேசியம் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. இது எமது தமிழ் மக்களால் ஏற்படுத்திய தமிழ் தேசியக் கூட்டமைப்பால்தான்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் எமது நிலங்கள் விடுவிக்கப்படல் வேண்டும், சிறையில் வாடும் எமது மக்கள் விடுதலை செய்யப்படல் வேண்டும், இனப்பிரச்சனைக்குரிய தீர்வுக்காக பேச்சுவார்தைகள் நடாத்தப்படல் வேண்டும், காணாமல் போனவர்களுக்கு நீதி வேண்டும், போன்ற பல மக்கிய விடையங்களை இந்த அரசிடம் கேட்டிருந்தோம், என அவர் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: