29 Apr 2015

எமது அரசியல் தீர்வை நோக்கிய பயணம் நின்றுவிடப் போவதில்லை –தண்டாயுதபாணி.

SHARE
கிழக்கில் நாம் அமைச்சுப் பொறுப்புக்களை எடுத்ததன் மூலம் எமது கட்சி எடுத்துக் கொண்டிருக்கின்ற அரசியல் தீர்வை நோக்கிய பயணம் நின்றுவிடப் போவதில்லை.  இந்த நாட்டிலே தமிழ் மக்களின் பிரச்சனைகள் எதுவும் அடிப்படையாகத் இன்னும் தீர்க்கப் பட்டவில்லை, ஆனால் எமது மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான அரசியல் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

என கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தெரிவித்துள்ளார்.

மட்.திருப்பழுகாமம் விபுலாநந்த வித்தியாலயத்தின் 137 வது ஆண்டு நிறைவு  விழா சனிக்கிழiமை (25) கொண்டாடப்பட்டது. இதன்போது கலந்து கொண்டு உரையாற்றுகைளயிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்….

மாணவர்கள் ஆசிரியர்களைத் தெய்வமாகப் போற்ற வேண்டும். எனவே எந்தவொரு சமூகம் தம்மை உருவாக்கின்ற ஆசிரியர்களையும், வழிகாட்டுகின்ற ஆசான்களையும், மறக்கின்றதோ அச்சமூகம் முன்னேற்றமடையாது. ஆசிரியர்கள் தெய்வத்துக்குச் சமனானவர்கள். எனவே ஆசிரியர்களை மத்தித்து நடாந்தால்தான் சமூகமே வளம்பெறும், மாவணர்கள், உயர்ச்சியடைவார்கள்.

தற்போதைய காலகட்டத்தில் பிரத்தியேக வகுப்புக்களுக்கு பிள்ளைகளை பெற்றோர்கள் அதிகம் உட்படுத்துகின்றார்கள், ஆனால் பிரத்தியேக கல்வி நிறுவனங்கள், பாடசாலைகளுக்கு ஈடாகாது. பிள்ளை பாடசாலைக்குப் போகின்றதா என்பதை விட பிரத்தியேக வகுப்புக்குச் சென்றுள்ளதா என்பதில் கவனம் செலுத்துவதுதான் பெற்றோர்கள் மத்தில் தற்போது பெருகிவிட்டது. அந்த அளவிற்கு பாடசாலை முறைமையை கௌரவிக்காதவர்களாக பெற்றோர்கள் மாறவிட்டார்கள். எனவே இவற்றில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். பாடசாலை முறைமையை மேலோங்கச் செய்ய வேண்டும். கடந்த கால அழிவுகளில் எமது மக்கள் மத்தியில் மிஞ்சியது கவ்வி மட்டுமே! எனவே அக்கல்வியை எமது பிள்ளைகளுக்கு உரிய முறையில் ஊட்ட வேண்டும்.

பாடசாலைகள் சமூகத்தின் சொத்து அப்பாடசாலையின் வளத்தினை முழுமையாகப் பெற்று எமது பிள்ளைகளுக்கு வளங்க வேண்டும் என்பதில் எமது சமூகம் அக்கறையுடன் செயற்பட வேண்டும்.

சில இடங்களில் கல்வி வளங்கள் விரையமாக்கப் படுகின்றனதான், கல்வி நிருவாகத்திலே அவை சீரக்கப்படல வேண்டும். பாடசாலையிலே உள்ள முதன்மையான வளமாகக் காணப்படுகின்ற ஆசியர்களை பாடசாலைகளுக்கு சரியான முறையில் பங்கீடு செய்து வழங்கப்படல் வேண்டும்.

மிக நீண்டகாலமாக எமது மக்கள் பல துன்பங்களைச் சந்தித்து சிரமப்பட்டுப் போயுள்ளார்கள் ஆனால், தற்போது கிழக்கு மாகாணத்திலே சில வாய்ப்புக்கள் கிடைத்திருக்கின்றன அவற்றை தற்போது உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தற்போதும் கூட தமது சொந்த நிலங்களுக்கு மீண்டும் செல்லமுடியாமவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலிருக்கின்றார்கள். அவலப்பட்டுப் போயுள்ள எமது மக்களுக்குச் சேவை செய்வதற்காக கிழக்கு மாகாணத்தில் தற்போது எமக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதனூடாக எமது மக்களுக்குச் செய்ய வேண்டிய அனைதுத் வேலைகளையும் மேற்கொண்டு வருகின்றோம்.

கிழக்கு மாகாணத்தில் கல்வித் துறையினையும், புணரமைப்பு மீள்குடியமர்த்தல் ஆகிய பொறுப்பக்களை நான் எடுத்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றேன். கிழக்கில் நாம் அமைச்சுப் பொறுப்புக்களை எடுத்ததன் மூலம் எமது கட்சி எடுத்துக் கொண்டிருக்கின்ற அரசியல் தீர்வை நோக்கிய பயணம் நின்றுவிடப் போவதில்லை.  இந்த நாட்டிலே தமிழ் மக்களின் பிரச்சனைகள் எதுவும் அடிப்படையாகத் இன்னும் தீர்க்கப் பட்டவில்லை, ஆனால் எமது மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான அரசியல் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

கிழக்கில் அமைச்சுப் பெறுப்பக்களை ஏற்றது எமது மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தீரு;த்துக் கொள்வதற்கான வாய்ப்பாக ஏற்றுக் கொண்டிருக்கின்றோமே தவிர எமது அரசியல் பாதையில் எதுவித மாற்றமும் ஏற்பட்ட விடமுடியாது. ஏன அவர் தெரித்ததார்.
SHARE

Author: verified_user

0 Comments: