29 Apr 2015

கடந்தகாலங்களில் மாகாண, மத்திய, அரசுகளில் தமிழர்களே பலஉயர் பதவிகளை வகித்தனர்.

SHARE
இன்று எட்டாவது அகவையில் கால்பதித்துள்ள தென்றல் சஞ்சிகை பலவிடயதானங்களை எமது மக்களுக்குத் தெளிவுபடுத்துவதுடன் எமது பிரதேசமாணவர்களின் கல்வி வளர்ச்சியிலும் கூடியகவனம் எடுத்து செயற்படுவதைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

இவ்வாறு கிழக்குமாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்தார்.

மட்டக்களப்பிலிருந்து வெளிவரும்  தென்றல் சஞ்சிகை 2015 இல் ஐந்தாம் ஆண்டு புலமைத் தேர்வுப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காக நடத்திய முன்னோடிப் பரீட்சையின் மூன்றாம் கட்டத்தில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான பதக்கம் அணிவித்து, சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சனிக் கிழமை (25) மட்.கொக்கட்டிச்சோலை ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாலய கேட்போர் கூடத்தில் தென்றல் சஞ்சிகைஆசிரியர் க.கிருபாகரன் தலைமை நடைபெற்றது. இத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கருதது தெரிவிக்கையில்.

ஒருபத்திரிகை தனது விநியோகப் பணியில் கவனம் செலுத்தும் போது அதனுடன் இணைந்த வகையில் கஷ்டப் பிரதேச மாணவர்களின் கல்வி வளர்ச்சியிலும் ஈடுபாடு காட்டுகிறது. இப்பணியை வேறெந்தப் பத்திரிகையும் செய்ய வில்லை. நாம் கடந்த காலயுத்தத்தின் காரணமாக பலதுறைகளிலும் பின்னடைவுகளைச் சந்தித்து இருக்கிறோம். நாம் இழந்தவைகளைக் கல்வியின் ஊடாக வேமீளப் பெறமுடியும்.

இப்பிரதேசத்திலுள்ள மாணவர்களின் பெற்றோர்களில் பெரும்பாலானோர் அரசாங்க உத்தியோகத்தர்களாக இருக்க மாட்டார்கள். இவர்கள் செய்யும் தொழிலை தமது பிள்ளைகளும் செய்ய அனுமதிக்க மாட்டார்கள். தமது பிள்ளைகளை நவீன தொழில் நுட்பமாற்றங்களுக்கு ஈடு கொடுக்கக் கூடியவகையில் தயார் படுத்தவே முனைவர். இம்மாணவர்கள் புலமைத் தேர்வுப் பரீட்சைக்குத் தயார்படுத்தும் போது அது கல்வி பொதுத்தர சாதாரண தரம்இ, கல்வி பொதூர உயர்தரம், ஆகிய பரீட்சைகளுக்கான அடித்தளமாக அமையுமென்பதில் எவ்வித ஐயமுமில்லை.

கடந்தகாலங்களில் மாகாண, மத்திய, அரசுகளில் தமிழர்களே பலஉயர் பதவிகளை வகித்தனர். ஆனால் தற்போது இந்நிலை மாறி நாம் 2ஆம், 3ஆம் நிலைக்குச் சென்றுள்ளோம் என அவர் தெரிவித்தார்.

இதன்போது தென்றல் சஞ்சிகையின் ஆசிரியர் க.கிருபாகரன் கருத்து தெரிவிக்கiயில்.

தென்றல் சஞ்சிகை கடந்த 06.04.2015 அன்று எட்டாவது அகவையில் காலடி எடுத்து வைத்திருக்கிறது. இந்நிலையை நாம் அடைய பல்வேறு தடைகள், இடையூறுகளைச் சந்தித்துள்ளோம். இருந்த போதிலும் தமிழ் பேசும் மக்களுக்காக எல்லாத் தடைகளையும் தாண்டித் தென்றல் சஞ்சிகை தொடர்ந்தும் வீறு நடைபோட்டு வருகிறது.

இவற்றோடு எமதுமக்களின் பண்டைய கலைகளான இயல், இசை, நாடகம், நாட்டியம், நாட்டுப் பாடல், நாட்டுக்கூத்து முதலியவற்றுக்கும்-உள்நாட்டு விளையாட்டுக்களுக்கும் புத்துயிரளித்து மேலோங்கச் செய்வதில் தென்றல் முன்னின்று உழைக்கும். அத்தோடு எமதுமாணவர் சமூகத்தின் கல்வி அடைவ மட்டத்தினை உயர்த்து வதிலும் கரிசினையுடன் செயற்படும் என அவர் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: