மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இப்பிரதேச வாழ்வின் எழுச்சி முகாமையாளர் வே.வரதராஜன், சமூர்த்தி வங்கிகளின் முகாமையாளர்கள், பயனாளிகள், என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது இவ்வருடத்திற்கான மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குரிய சமூர்த்தி சமாஜத்தின் புதிய நிருவாகிகள் தெரிவு செய்யப்பட்டனர். தலைவராக கோ.விஜிதாவும், செயலாளராக பதவிநிலை உத்தியோகஸ்தர் வாழ்வின் எழுச்சி முகாமையாளர் வே.வரதராஜனும், மற்றும் 21 நிருவாக சபை உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
0 Comments:
Post a Comment