எதிர்காலத்தில் இடம் பெறவிருக்கும் பொதுத் தேர்தல் மூலம் எமது நாட்டில் தேசிய அரசாங்கத்தினை அமைப்பதற்கு தமிழ் மக்கள் வழிசமைக்க வேண்டும். அதன் ஊடாகவே நாங்கள் எமது இனத்திற்கு தேவையானவற்றை பெற்றுக் கொள்ள முடியும், என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம்; தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்கு உபட்ட எருவில் கிராமத்தின் அபிவிருத்தி சம்மந்தமான கலந்துரையாடல் ஞாயிற்றுக் கிழமை மாலை 5.30 மணியளவில் எருவில் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் கனகரெத்தினம்; தலைமையில் எருவில் கண்ணகி மகாவித்தியாலய மண்டபத்தில் இடம் பெற்றது இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்…
பன்நெடுங்காலமாக எமது இனம் பேரினவாத சக்திகளால் தொடர்சியாக நசிபட்டுக் கொண்டிருக்கின்றோம், இந்த பேரினவாதிகளின் நலனுக்காக அவர்களை நாங்கள் விடக் கூடாது, தமிழ் மக்களாகிய நாங்கள் ஏனைய இனங்கள் போன்று சமமாக வழவேண்டும். அதுமாத்திரமின்றி ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும். எமது வாக்கு பலத்தின் மூலம் நாங்கள் இந்த நாட்டில் எமது இனம் சார்ந்த சாதனைகளை நிலைநாட்ட வேண்டும்.
கடந்த வடமாகாண சபைத்தேர்தல், மற்றும் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் மக்களின் வாக்களிக்கும் ஆர்வம் கூடியுள்ளதனை நாங்கள் அவதானிக்கின்றோம். இதனூடாக நாங்கள் இந்த நாட்டில் எதிகாலத்தில் பெரியமாற்றத்தினை ஏற்படுத்த முடியும்.
மக்களது கிராமம் சார்ந்த குறைகளை முன்வைக்கும் போது பல குறைபாடுகளை முன்வைக்கின்றார்கள், அவை அனைத்தையும் மிக இலகுவாக விரைவாக செய்து விடமுடியாது. அவற்றினைப் படிப்படியகவே செய்து முடிக்க வேண்டும் மாறாக உடனே செய்து முடிக்கமுடியாது. இருந்தாலும் தாங்கள் அனைவரும் ஒன்று கூடி இந்தக் கிராம மக்களின் குறைபாடு ஒன்றினை நான் அவதானித்தேன் பொது விளையாட்டு மைதானம் ஒன்று இந்த கிராமத்திற்கு இன்மையால் விளையாட்டு ரீதியான பல இடர்பாடுகளுக்கு இளைஞர்கள் முகம் கொடுத்து வருகின்றனர். என்பதாகும் இதனை கருத்திலேடுத்து இதனை நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என இதன்போது அவர் தெரிவித்தார்.

0 Comments:
Post a Comment