11 May 2020

நேர்காணல் : ஜோதிட ரீதியாக கோரோனா நோய் தொடர்பில் எவ்வாறு பார்க்கப்படுகின்றது. களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய பிரதம குருவும், இந்துக்குருமார் அமைப்பின் உறுப்பினரும், சிவ ஸ்ரீ சு.கு.வினாயகமூர்த்திக் குருக்களுடனான செவ்வி.(வீடியோ)

SHARE
(வ.சக்தி)

நேர்காணல் : ஜோதிட ரீதியாக கோரோனா நோய் தொடர்பில் எவ்வாறு பார்க்கப்படுகின்றது. களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய பிரதம குருவும், இந்துக்குருமார் அமைப்பின் உறுப்பினரும், சிவ ஸ்ரீ சு.கு.வினாயகமூர்த்திக் குருக்களுடனான செவ்வி.
இலங்கை உட்பட உலக நாடுகளையே கொவிட் - 19 எனும் புதியவகை கொரோனா வைரசின் தாக்கம் பல்கிப் பெருகிக் கொண்டே செல்கின்றது. இதனைக் கட்டுப்படுத்துவதற்காக மருத்துவ உலகம் அயராத முயர்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. இது ஒரு புறமிருக்க இயற்கையாகவே சமூகத்தின் மத்தியில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், உணவுப் பழக்க வழக்கங்கள், ஆரோக்கியமான செயற்பாட்டு, நடைமுறைகள், போன்றவற்றை அரசாங்கமும், ஏனைய சமூக நலத்துறை சார்ந்த அமைப்புக்களும், மக்கள் மத்தியில் முன்னின்று செயற்பட்டு வருகின்றன.

எனினும், மக்கள் மத்தியிலும் அவரவர் கடைப்பிடிகும் மதக் கொள்கைகளின் அடிப்படையிலும், உணவுப் பழக்க வழக்கங்கள் ரீதியிலும், இயற்கையான செயற்பாடுகளையும் கைக்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், தற்போதைய காலகட்டத்தில் மக்கள் எதிர் கொண்டுள்ள நோயின் தாக்கம் தொடர்பிலும், ஆலய உற்சவ வழிபாடுகள் தொடர்பிலும்…

கிழக்கிலங்கையின் புகழ்பெற்ற ஆலயமாக விழங்கும் மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய பிரதம குருவும், கிழக்கிலங்கை இந்துக்குருமார் அமைப்பின் உறுப்பினரும், சோதிடருமான, சிவ ஸ்ரீ சு.கு.வினாயகமூர்த்திக் குருக்களுடனான நேர்காணல்.

கேள்வி: தற்போது உலகையே பீடித்துள்ள கொவிட் - 19 என அழைக்கப்படும் புதிய வகை வைரஸின் தாக்கம் தொடர்பில் என்ன கருதுகின்றீர்கள்?

பதில்: உலகையே பாதித்திருக்கின்ற இந்த கொரோனா வைரஸின் தாக்கத்தினால் மனிதர்கள் மாத்திரமின்றி இறைவனுடைய வழிபாடுகளும் பாதித்திருக்கின்றன. இந்நோயினால் உயிர் நீர்தவர்களின் ஆத்மா இறைவனடி சேரவேண்டும் என பிரார்த்திக்கின்றேன். இலங்கை உட்பட உலகையே பீடித்திருக்கின்ற இந்த வைரஸின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவத்கு பலரும் பல வழிகளிலும் அயராது முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள்.. இலங்கையில் ஜனாதிபதி, மற்றும் பிரதமர் உள்ளிட்டோர் மிகுந்த அக்கறையுன் செயற்பட்டு வருகின்றார்கள். 

கேள்வி: ஜோதிட ரீதியாக இந்த நோய் தொடர்பில் எவ்வாறு பார்க்கப்படுகின்றது என தெரிவிக்கலாமா? 

பதில்: ஜேதிட ரீதியாகப் பார்க்கும்போது இந்த நோய் 2019 அக்டோபர் மாதம், 29 ஆம் திகதிக்குப் பின்னர் இருந்து இதன் தாக்கம் உருவெடுத்துள்ளதை கிரக மாற்றங்கள் வாயிலாக அவதானிக்க முடிந்திருந்தது. “இலங்கையில் 2020 யூலை 08 ஆம் திகதியுடன் இந்த கொரோனா நோயின் தாக்கத்தின் இஸ்த்திரத் தன்மையிலிருந்து குறையும் வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன.” ஒவ்வொரு நாடுகளும் இந்த நோயை ஒழித்துக் கட்டுவதற்கான காலங்களை குறிப்பிட்டுள்ளார்கள், அவற்றுள் 2021 யூன் மாதம் வரையில் வரையறை செய்துள்ளன. ஆனாலும் “எதிர்வருகின்ற ஒன்பதாம் மாதம் 26 ஆம் திகதிக்குப் பின்னர் உலக நாடுகளிலிருந்து இந்த நோய் இல்லாமல் போய்விடும்.” என பார்க்கப்படுகின்றது.

இது சீனா நாட்டில் உருவெடுத்தாலும், இந்நோயின் தாக்கம் அதிகரிப்பதற்கு உயிர் தன்மையான வியாழன் கிரகத்துடன் நச்சுத்தன்மையான ராகு கேதுவினுடைய செயற்கைதான் இதற்குரிய முழுக் காரணமுமாக இருக்கின்றது. இவ்வாறான நோய்த் தக்கம் 12 வருடங்களுக்கு ஒருமுறை, 18 வருடங்களுக்கு ஒருமுறை, 32 வருடங்களுக்கு ஒருமுறை இவ்வாறு உலக சீற்றங்கள் வருவதுண்டு.

கேள்வி: கொரோனா தாக்கத்தினால்  ஆலயங்களில் வருடாந்தம் நடைபெறும் விழாக்கள், மற்றும் கும்பாபிஷேகம், என்பனவும் தடைப்பட்டுள்ளனவே இதுபற்றி கூறுங்கள்? 

பதில்: இதனால் ஆலய கடமைகளும் மட்டுப்படுத்தப் பட்டுள்ளன. நித்திய பூஜைகள் நடைபெற்றாலும், குறிக்கப்பட்ட காலங்களில் மஹோற்சவங்கள், கும்பாபிஷேகங்கள், போன்றவற்றை குறிப்பிட்ட காலத்திற்குள் மேற்கொள்ள வேண்டும் என்றுதான் ஆகமங்கள் குறிப்பிடுகின்றன. விசேட பூஜைகள் தடைப்பட்டால் நாட்டின் ஆரோக்கியம், சுகங்கள், அனைத்தும் குன்றி, இயற்கையின் சீற்றம் அதிகரிக்கும் எனவும்,  எமது பூஜை வழிபாடுகள் நாட்டிற்கும், உலகிற்கும் நன்மை வேண்டிதான் நடைபெறுகின்றன எனவும், திருமூலனார் பாடலிலே தெரிவிக்கப்பட்டுள்ளது.

தறகாலத்தில் இந்த நோயை ஒழிப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்ற அனைத்து நடவடிக்கைகளையும் நாம் வரவேற்கின்றோம், அதற்காக விதித்திருக்கின்ற கட்டுப்பாடுகள் அனைத்தும் தேவையானவைதான், ஆனால் குறித்த காலங்களில் ஆலய வழிபாடுகளை பின்பற்றி நடத்தினால், நாடும் நாட்டு மக்களும் சுபீட்சமான நிலைக்கு உருவாகுவார்கள் என நினைக்கின்றோம். தற்போது தெரிவிக்கப்படுகின்ற கைகால் கழுவுதல், முகக் கவசம் அணிதல், சுத்தம் பேணுதல் போன்ற விடையங்களை இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து எமது ஆலயங்கள் கடைப்பிடித்து வருகின்றன. 

எனவே வர இருக்கின்ற கண்ணகி வழிபாடுகள் உள்ளிட்ட உற்வசங்களை உரிய தடையின்றி சம்மந்தப்பட்டவர்களின் அனுமதிகளைப் பெற்று செய்ய வேண்டும். ஆலயங்களுக்கு மக்கள் வர முடியாவிட்டாலும், ஆலய குருமார் மற்றும், நிருவாக சபையினரும், முன்னின்று விசேட பூஜைகளை மேற்கொண்டால் நன்றாக அமையும். இதற்கு அரசாங்கும் உரிய அனுமதியைத் தந்துதவுவதற்கு முன்வர வேண்டும்.

கேள்வி : தமிழர்களின் உணவுப் பழக்க வழங்கங்கள் தொடர்பில் கூறுங்கள்?

பதில்: ஆலய வழிபாடுக்ள மாத்திரமின்றி சைவ உணவுப் பழக்க வழங்கங்களிலும் கொரோனா நோய் மாத்திரமின்றி அனைத்து நோய்களிலுமிருந்து பாதுகாப்பதற்குரிய உணவுப் பழக்கங்களை எமது முன்னோர்களின் காலத்திலிருந்து பின்பற்றி வந்திருக்கின்றோம். ஆனால் தற்காலத்தில் நவீன உணவுப் பழக்கங்களை நோக்கி நகர்வதனால், மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைகின்றது. 

எமது சமயம் கூறும் மரக்கறி உணவு வகைகளை அதிகம் உட்கொண்டால், நோய் எதிர்ப்பு சக்கி உண்டாகும். காரணம் அவ்வகையான உணவுகளில் இற்கையாகவே மருத்துவக் குணங்கள், அமைந்துள்ளன. எனவே பழமைகளை மக்கள் மறந்துவிடாது செயற்பட வேண்டும். மக்கள் இயற்கை உணவுகளை எடுத்தால் ஆரோக்கியமான வாழ்வை வாழலாம். சமய கலாசாரங்கள், மற்றும் உணவு வகைகளையும் பின்பற்றி நடந்தால் இன்னும், பல ஆண்டுகள் நோயின்றி வாழலாம். என அவர் தெரிவித்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: