15 Dec 2014

ஜனாதிபதியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் அருண் தம்பிமுத்து அர்களுடனான நேர்காணல்,நேர்காணல்

SHARE
கிழக்கில் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டம் கடந்த யுத்த சூழ் நிலையினாலும் சுனாமி போன்ற கோர இயற்கை அனர்த்தங்களினாலும் பெரிதும் பாதிக்கப் படிருந்தது. தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப் பட்டு வருகின்றன

இந்நிலையில மட்டக்களப்பு மாவடத்திற்கு புதிதாக நியமிக்கப் பட்டுள்ள ஜனாதிபதியின் இணைப்பாளரும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியின் அமைப்பாளரும், ஜனாதிபதியின் அலோசகருமான  அருண் தம்பிமுத்துவுடனான நேர்காணலை இங்கு தருகின்றோம்.

கேள்வி: ஜனாதிபதியினால் இம்முறை சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திடம் பற்றி என்ன கருதுகின்றீர்கள்?

பதில்: கடந்த 40 ஆண்டுகளுக்குப் பின்னர் வருமானம் மற்றும் செலவு ஆகியவற்றுக் கிடையிலான வித்தியாசத்தைப் பார்த்தால் ஆகக் குறைவாகக் காணப்படுகின்றது. இதற்கு முன்னர் வரவுக்கும், செலவுக்குமான உரிய வித்தியசம் அதிகமாகக் காணப்பட்டு வந்தன. இது  பொருளாதார ரீதியான முக்கியத்துவத்தினைக் காட்டுகின்றது.

இவற்றினை விட இளைஞர் யுவதிகளின் தேவைகள் உத்தியோகஸ்தர்களின் சம்பளம் உயர்த்தப் பட்டுள்ளது. கடந்த 5 வருடகாலமாக அரசாங்கம் கட்டுமான அபிவிருத்திக்கு பாரிய முக்கியத்துவத்தினைக் கொடுத்துள்ளது. ஆனால் இம்முறை சம்ர்ப்பிக்கப் பட்டுள்ள வரவு செலவுத் திடத்தில் மக்களின் வாழ்வாதார அபிவிருத்திக்காக பாரிய நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

இது எதிர் வருகின்ற 5 வருடங்களில் மக்களின் வாழ்வாதார ரீதியாக பாரிய மாற்றங்களைக் கொண்டு வருவதற்குரிய முதலாவது வரவு செலவுத் திடமாகத்தான் இதனைக் கருதுகின்றேன்.

கேள்வி: வடக்கு, கிழக்கு மக்களின் மனங்களை வெல்வதற்கு அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கருதுகின்றீர்கள்?

பதில் : வடக்கு, கிழக்கு எனும் போது இரண்டு மாகாணங்களிலும் வித்தியாசமான தேவைகளும், பிரச்சனைகளும்தான் இருக்கின்றன.  கிழக்கு மாகாணத்தில் 1976 இற்கு முன்னர் தமிழர்கள் பெரும்பான்மையாக அதாவது 50 வீதத்திற்கு அதிகமாக இருந்துளார்கள். ஆனால் தற்போது போராட்டம் மற்றும் புலம் பெயர்ந்ததன் காரணங்களினால் தமிழர்களுடைய விகிதாசாரம் குறைந்து போயுள்ளது. தற்போது கிழக்கில் 34 வீதத்திற்குக் குறைவாகத்தான் தமிழ் மக்கள் காணப்படுகின்றார்கள்.  ஆனால் 1984 ஆம் ஆண்டுக்குப் பின்சென்று பார்தால் தமிழர்கள் 44 வீதமாகக் காணப்பட்டார்கள்.

இந்த நிலையில் அரசியல் தீர்வு எனும்போது வடகிழக்கு இணைந்த மாகாண சபைக்கான தீர்வைத்தான் இலங்கை இந்திய ஒப்பந்தம் முன் வைத்தது. இந்த தீர்வு முன்வைக்கப்பட்டு ஒரு  வருட காலத்தினுள் கிழக்கில் சர்வசன வாக்கெடுப்பை நடாத்தி கிழக்கு மக்கள் ஏற்றுக் கொண்டால் அதனை வடக்குடன் இணைப்பது என்றும், கிழக்கு மக்கள் ஏற்றுக் கொள்ளா விட்டால் கிழக்கு தனியாகவும், வடக்கு தனியாகவும் செயற்படும் என்றுதான் இலங்;;கை இந்திய ஒப்பந்தம் கைச்சாதிடப் பட்டது.

13 வது திருத்தச் சட்டமும் அதைத்தான் கூறியிருக்கின்றது. அதற்குப் பிறகு சரத் என்.சில்வாவின் தீர்ப்பின் கீழ் சர்வசன வாக்கெடுப்பு நடாத்தப்பட வில்லை என்பதாலும் வடக்கு வேறாகவும், கிழக்கு வேறாகவும் பிரிக்கப்பட்டன. 

தற்போது கிழக்கில் 34 சதவீதமாக்க காணப்டும் தமிழர்களின் எண்ணங்கள், தேவைகள், எவ்வாறு பிரதிபலிக்கப்படும் என்ற கேழ்வியும் எழுந்துள்ளது.

முக்கியமாக மாகாண சபை முறைமையில் இருக்கின்ற காணி பொலிஸ் அதிகாரங்கள் ஆகியவற்றை கவனித்தால் இந்த அதிகாரங்கள் எதற்காக எனச் சிந்திக்க வேண்டும்.  காணி அதிகாரங்களைப் பாவித்து எமது பூர்வீக நிலங்களைப் பாதுகாப்பதற்காக என்ற காரணம்தான் அடிப்படையாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் பொலிஸ் அதிகாரம் என்பது கணி அதிகாரத்தையும் ஏனைய அதிகாரங்களையும் அமுல் செய்வதற்கு பலமான ஒரு அம்சமாக்க காணப் படுகின்றது. கிழக்கில் சிறுபான்மையாகக் காணப்படும் தமிழர்களின் பூர்வீக நிலங்ளை எவ்வாறு இந்த காணி அதிகாரம் பாதுகாக்கும் என்ற கேழ்வி எழுந்துள்ளது. கிழக்குத் தமிழர்கள் காணி சம்மந்தமாக பாரிய நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றார்கள்.

ஆனால் வட கிழக்கு இணைந்த வகையில் ஒரு அரசியல் தீர்வு எனும்போது அது கடினமாக அமையும். ஏனெனில் வடக்கு மக்களின் தேவைகளும், கிழக்கு மக்களின் தேவைகளும் வித்தியாசமாகக் காணப் படுகின்றது. இதனை அனைத்து தமிழர்களும்  உணர வேண்டும்.

அதனடிப்படையில் அரசாங்கம் முன்வைக்கும் தீர்வில் கிழக்குத் தமிழர்களின் அபிலாசைகளையும், தேவைகளையும், உணர்ந்து அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும்.

கேள்வி: அரசினால் கிழக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திடங்கள் பற்றி என்ன கூறுகின்றீர்கள்?

பதில் : அரசாங்கம் ஆயிரக்கணக்கான மில்லியன்களை மக்களின் அபிவிருத்திகளுக்காக செலவு செய்திருக்கின்றது. இதனால் பாரிய முன்நேற்றங்கள் அடைந்திருக்கின்றன. இதனை எவரும் மறுக்க முடியாது வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம், என்றெல்லாம் திட்டங்கள் முன்மொழியப்பட்டு நடைபெறுகின்றன. அபிவிருத்திகள் நடைபெற்றிருக்கின்ற அதேவேளை சில கேழ்விகளையும் எழுப்ப வேண்டும். கார்பட் வீதிகளை விடகொங்றீட் வீதிகளுக்கு செலவு அதிகம், இது பிரதேச அரசியல் தலைவர்ளும், அதிகாரிகளாலும் எடுக்கப்பட்ட முடியவாகும். அரசாங்கம் தேசியரீதியில் பணத்தை செலவு செய்தாலும். சரியான முறையில் இந்தப் பணங்கள் சென்றடைந்திருக்கின்றதா என்ற கேள்வி எழும்பொழுது இங்குள்ள அரசியல் தலைவர்களும் மற்றும் நிருவாகிகளும் பதில் கூறவேண்டிய கட்டாயம் இருக்கின்றது.

இதனை வழிட கிழக்கு மாகாணத்தில் இருந்த நல்லையா அவர்களின் காலத்திற்குப் பின் இதுவரையில் ஒரு தொழில் பேட்டையும் அமைக்கப் படவில்லை அவரது காலத்தில் அமைக்கப்பட்ட வாழைச்சேனை கடதாசி ஆலைகூட தற்போது மூடப்பட்டுள்ள வேதனையான நிலை காணப்படுகின்றது.

கிழக்குத் தழிழர்களுக்கென்று வாழ்வாதாரம் கட்டியெழுப்பப்படல் வேண்டும், தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும், இவற்றுக்கு இனிவரும் காலத்தில் அரசு முன்வர வேண்டும். என்ற விடையத்தை அரசிடம் நாங்கள் தெழிவாக முன்வைக்க வேண்டும்.

கேள்வி: கிழக்கு மாகாண தமிழ், முஸ்லிம் உறவு பற்றி என்ன கருதுகின்றீர்கள்?

பதில் :  கிழலுள்ள தமிழர்களும், முஸ்லிம்களும் தனித்துவம் கொண்ட சமூகங்கள். என்னைப் பெறுத்த வரையில் தமிழ் முஸ்லிம் உறவுகள், சிங்கள் தமிழ் உறவுகளைப் போன்றுதான் இருக்க வேண்டும். தமிழர்களும், முஸ்லிம்களும் ஆகிய இரு சமூகமும் பின்னிப்பிணைந்து தேவைகளை முன் வைக்க முடியாது.  தமிழர்களுக்கும் முஸலிம்களுக்கும் பாரிய வித்தியாசங்கள் இருக்கின்றன, கலாசார ரீதியாகவும் பாரிய விதியாசங்கள் இருக்கின்றன ஆனால் மொழியில் உடன்பாடுகள் இருக்கின்றன. மொழிக்கு வெளியெ இரு சமூகத்திற்கும் தனித்துவம் இருக்கின்றது. இந்தியாவின்  தமிழ் நாட்டிலுள்ள முஸ்லிங்கள் அவர்களை தமிழர்களாகத்தான் சொல்லி வருகின்றார்கள். ஆனால் இலங்கயிலுள்ள முஸ்லிம்மகள் தனித்துவமான சமூகமாக தெழிவாக் இனம் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

கடந்த 30 வருடகாலத்தில் தமிழர்கள் ஆயுதப் போராட்டத்திலும் சரி ஏனைய போராட்டங்களிலும் சரி முஸ்லிம்கள் அதில் தங்களை இணைக்காமல் செயற்பட்டு தற்காத்துக்கொண்டு வந்துள்ளார்கள். இந்நிலையில் இரண்டு சமூகத்திற்கும் நல்லுணர்வு இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தும் நாங்கள் தமிழர்கள்; தனித்துவத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற விடையத்தை மறந்து விடக்கூடாது.  தமிழர்களும், சிங்களவர்களும், முஸலிம்களும் சேந்துதான் கிழக்கு மாகாணத்தில் வழவேண்டும். இதனை எவரும் மறுக்க முடியாது. ஆனால் இதனுள் தமிழர்களின் தனிதுத்துவத்தை எப்படிப் பாதுகாப்பது. எப்படி வட மாகாணத்தில் தமிழர்கள், எனைய சமூகத்தினரின் அடையாளங்களை பறித்துக் கொள்ளக் கூடாது என நினைக்கின்றார்களோ அதேபோல் கிழக்கிலுள்ள தமிழர்களும் அவர்களது அடையாளங்களை அழிப்பதற்கு உரிய எந்தவொரு காரியத்தையும் அனுமதிக்க முடியாது.

தற்போதைய நிலையில் கிழக்கு மாகாணசபையை ஆண்டு கொண்டிருப்பது எமது சகோதர இனமான முஸ்லிம்கள்தான் தமிழர்கள் வெறும் பார்வையாளர்களாகத்தான் இந்த கிழக்கு மாகாணத்தில் இருக்கின்றார்கள். அனர்த்த நிதி ஒதுக்கீட்டில் கூட பாரிய பிரச்சனைகள் இருக்கின்றன முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் அவர்களது சமூகத்தை முன்வைத்தி பாரிய வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்கள்.  தமிழ் சமூகத்தின் பிதிநிதித்துவம் குறைவாகவே காணப்படுகின்றது. இந்நிலையில் தமிழர்கள் மத்தில் ஒரு தளர்ச்சியும், வேதனையும் ஏற்பட்டுள்ளது என்பதனை உணரவேண்டிய கடப்பாடு அனைவருக்கும் உள்ளது.  தமிழர்கள் தமது பிரதிநிதித்துவத்தை தேசிய அரசியலில் முன்வைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.

கேள்வி: கிழக்கில் குறிப்பாக எல்லைப் பிரதேசங்களில் தமிழ் மக்கள் மத்தியில் காணிப்பிரச்சனைகள் இருக்கின்து என கூறப்படுகின்றதே…………….. 

பதில் :  வட்டமடு, நாவிதன்வெளி, கல்முனை, காத்தான்குடி, ஏறாவூர் பற்று, கோறளைப்பற்று ஆரையபதி, போன்ற பல பகுதிகளில் காணிப் பிரச்சனைகள் எழுந்துள்ளன. இவைகளுக்கு எவ்வாறான தீர்வுகள் காணப்பட முடியும்.
கிழக்கிலுள் தமிழர்கள் அவர்களது காணிகளைப் பாதுகாப்பதற்குச் சவால்கள் எழுந்துள்ளன. இவற்றுக்கு எவ்வாறு தமிழ் சமூகம் முகம் கொடுக்க முடியும். என்ற நிலை இருக்கின்றபோது 13 வது திருத்தச் சட்டம், தமிழ்மக்களுக்கு எந்த விதமான சாதகத்தையும் கொடுக்காது. என்ற விடையத்தை நாங்கள் உணர வேண்டும்.


கேழ்வி: ஜனாதிபதித் தேர்தல் அடுத்த வருடம் வரப்போகின்றது என பலர் மத்தியிலும் பேசப்படுகின்றதே!  இதுபற்றிக் கூறுங்கள்?  

தேசிய தேர்தல்கள் நிட்சயமாக அடுத்த வருடம் வரப்போகின்றன என்பதை நாங்களும் கருதுகின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் நாங்கள் தேசிய தேர்தல்களை எதிர் கொள்வதற்கு நாங்கள் ஆயத்தமாக இருக்கின்றோம். முக்கியமாக ஜாதிபதித் தேர்தலை எடுத்துக் கொண்டால் முக்கியமாக கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்கப்பு மாவட்டத்தில் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் செயற்பட்டு வருகின்றோம். காரணம் கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழர்கள் தேர்தல் காலத்தில் எடுத்த முடிவுகள் தமிழர்களுக்கே சாதகாமாக அமைந்திருக்க வில்லை.

இனிவரும் காலங்களில் தமிழர்கள் தேசிய அரசியலில் முக்கியமாக பாரிய அபிவிருத்திகளை முன்னெடுத்த எனது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் கரத்தைப் பலப்படுத்த வேண்டும் என்ற ரீதியில் தமிழ் மக்கள் வாக்கழிக்க வேண்டும் என்ற கருத்தை நான் முன் வைக்க விரும்புகின்றேன்.

அது மட்டுமின்றி தமிழ் மக்கள் காலாகாலமாக வெற்றிபெறும் தலைவர்கள் யார் என்பதை அறியாமலும், வாக்குகளை அளிக்காமலும். தேசியரீதியில் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாத தலைவர்களுக்கு வாக்கழித்து வந்ததன் மூலம்  எமது ஞாயமான தேவைகளும், கோரிக்கைகளும் பூர்தி செய்யப்படுமா என்பதை தொடர்ச்சியாகக் கேட்க வேண்டும்.

கேள்வி: தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கோரப்பட்டுவரும் உரிமை, தேசியம் போன்ற விடையங்கள் பற்றி என்ன கருதுகின்றீர்கள்?

பதில்:  நானும் தமிழ் தேசியப் பின்னணியில் இருந்து வளர்ந்தவன் என்ற ரீதியில் தமிழ் தேசியத்தை வெறுப்பவன் அல்ல. இருந்தலும் கூட தமிழ் தேசியத்தை விட தமிழர்கள் முக்கியம் என்று கருதுபவன். தமிழ் தேசியத் தலைவர்கள் 1948 இற்கு முன் ஏன் தனிநாட்டுக் கோரிக்கையை முன் வைக்கவில்லை என்ற கேழ்;வியை நாங்கள் சற்று சிந்திக்க வேண்டும். 1948 இற்கு முன் எந்த ஒரு தமிழ் தேசியத் தலைவரும் தனிநாட்டுக் கோரிக்கையினை முன் வைக்காமல் 1949 ஆம் அண்டு சுந்தரலிங்கம் அவர்கள் தமக்குத் தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கையினை முன் வைத்தார், இதுவரையில் தமிழர்கள் முன் வைக்கும் கோரிக்கைளுக்கு தீர்வுகள் வரவில்லை என்றால் ஏன்? என்ன காரணம்? என்பததையும் சற்று ஆராயப்பட வேண்டும்.

ஆனாலும் தற்போது வரைக்கும் அவர்கள் அதே பாணியில் அதே பல்லவியைப் பாடிக்கொண்டு வருகின்றார்கள் என்று கேட்டால் அவர்கள் தமது காலத்தை அறியாமல், ஜதார்த்தத்தை உணராமல், தொடர்ந்து உணர்ச்சி அரசியல் மூலமாக  தமது அரசியல் நடவடிக்கைகளை முன்நெடுக்கலாம் என கருதுகின்;றார்கள். 

1987 ஆம் அண்டுக்கு முன்னர் இந்தியாவின் மூலம் தீர்வுகள் வரும் என தமிழ் தேசியத் தலைவர்கள் முன்வைத்தார்கள். பின்னர் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு விட்டு மீண்டும் ஒரு முறை இந்தியாவின் மூலம் திர்வு வரும் எனக் கூறுகிறார்கள் பின்னர் சர்வதேச மயமாக்கிவிட்டோம் என்று கூறுகின்றார்கள்.

1983 இல் இருந்து தமிழர்களின் பிரச்சனைகள் சர்வதேச மயமாக்கப் பட்டிருந்ததுதான் இருந்த போதிலும் தமிழர்;களின் பிரச்சனைகள் என்ற விடையத்தில் சர்வதேச ரீதியில் மழுங்கடிக்கப்பட்டு வந்துள்ளன. இவற்றினை உணராமல் தமிழர்களின் பிரச்சனைகள் சர்வதேச மயப்படுத்தப் படுள்ளது. என்று சொல்லப்பட்டு வருவதானது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதனை நாங்கள் மறுக்கவே முடியாது. தற்போதுள்ள தமிழ் தலைவர்கள் போருக்குப் பின்னர் தமிழ் மக்களை எவ்வாறு பலப்படுத்தலாம் என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும்.  அபிவிருத்தி முக்கியமில்லை உரிமைதான் முக்கியம் என்று கூறுகின்றார்கள்.

உரிமை வேண்டாம் என நான் கூறவில்லை உரிமையினைப் பெறுவதற்கு ஆயத்தமான நிலையில் தமிழர்கள் இருக்கின்றார்களா? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தற்போது தமிழர்கள் அரசியலைப் பலப்படுத்தி அடுத்த சந்ததியினரின் கையில் கொடுக்க வேண்டும். அது மட்டுமன்றி எமது தமிழர்களின் உரிமைக் பாதுகாக்கப்பட வேண்டுமானால் தமிழர்களின் பொருரளாதாரம் மீண்டும் கட்டி எழுப்பப் படல் வேண்டும் தற்போது அபிவிருத்தியில் நாங்கள் வெறும் பார்வையாளர்களாக இருக்கின்றோம். நாங்கள் ஏனைய சமூகத்தினை நம்பி அர்களிடம் கையேந்தும் பிச்சைக்காரர்கள் போல் மாற்றப் பட்டிருக்கின்றோம். 

மட்டக்களப்பு மாவட்டத்தில் 75 வீதமாகவுள்ள தமிழ் மக்கள் மத்தியில் அபிவிருத்திக் குழுத்தலைவர் யார் என்றால் சகோதர இனத்தைச் சார்ந்தவராகத்தான் இருக்கின்றார். இந்த மாவட்டத்தின் அபிவிருத்திக்கான ஒதுக்கீடுகள் பல ஏனைய சமூகத்தினைப் பிரதிபலிக்கின்ற பகுதியில்தான் அதிகம் இடம்பெறுகின்றன. என்பதையும் நாம் மறந்துவிட முடியாது. இவை அனைத்திற்கும் காரணம் என்ன வென்றால் வெறுமனே எதிர் கட்சியில் இருந்து கொண்டு ஏங்கிக் கொண்டு இருப்பதனால் தமிழர்களின் எதிர் காலத்தைப் பலப்படுத்த முடியாது. எமது அடுத்த சந்ததியினரை சிறுபான்மை இனமாக மட்டுமல்ல செயலிழந்த சமூகமாக தள்ளுவது என்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.


கேள்வி: மாகாணசபை அதிகார முறையில காணி, பொலிஸ் அதிகாரத்திற்கு எதிரானவர் நீங்கள் ஏன என விளக்கமாகக் கூறுங்கள்.

பதில்:  மாகாண சபை முறைமையில் இருக்கின்ற காணி, பொலிஸ் அதிகாரங்கள் ஆகியவற்றை கவனித்தால் இந்த அதிகாரங்கள் எதற்காகச் சிந்திக்க வேண்டும்.  காணி அதிகாரங்களைப் பாவித்து எமது பூர்வீக நிலங்களைப் பாதுகாத்தல் என்ற காரணம்தான் அடிப்படையாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் பொலிஸ் அதிகாரம் என்பது கணி அதிகாரத்தையும் ஏனைய அதிகாரங்களையும் அமுல் செய்வதற்கு பலமான ஒரு அம்சமாக்க காணப் படுகின்றது. கிழக்கில் சிறுபான்மையாகக் காணப்படும் தமிழர்களின் பூர்வீக நிலங்களை எவ்வாறு இந்த காணி அதிகாரம் பாதுகாக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக இல்லாமல் தமிழர்களின் பாணியினை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்ற கேழ்வி எழுந்தள்ளது. கிழக்கு மாகாண சபையில் ஒரு தமிழர் கூட அமைச்சரவையில் இல்லை இந்நிலையில் காணி அதிகாரங்களைக் கொடுப்பதன் மூலம் கிழக்குத் தமிழர்கள் எந்த விததிலும் பயனடைய மாட்டார்கள் என்பது மட்டுமின்றி தற்போது காணிக்கான போட்டியும் தமிழர்கள் மத்தியிலும், முஸ்லிங்கள் மத்தியிலும் ஏற்பட்டிருக்கின்றது. 

இந்நிலையில் கிழக்குத் தமிழர்கள் மத்தியில் மாற்றுச் சமூகத்தினர் தமது காணிகளை அபகரிக்கப் போகின்றார்களா? என்ற அச்சமும் இருக்கின்றது. எனவே காணி, பொலிஸ் அதிகாரத்தில் கிழக்குத் தமிழர்கள் தமது ப+ர்வீக நிலத்தைப் பாதுக்காக்க முடியாது. என்பதை உணர்ந்துதான் நான் கிழக்கு மாகாணத்தில் காணி பொலிஸ் அதிகாரத்திற்கு எதிரானவனாக இருக்கின்றேன்.

கேள்வி: எதிர் காலத்தில் காலத்தில் வருகின்ற எந்த தேர்தலாக இருந்தாலும், தமிழ் மக்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என கருதுகின்றீர்கள்?

பதில்:  கிழக்கு மாகாணத் தமிழர்கள் தமக்கென ஒரு தனித்துவமான தலைவர்களை உருவாக்க வேண்டும். கிழக்குத் தமிழர்கள் தேசிய அரசியலில் முக்கிய பலமுள்ளவர்களாகக் காணப்படல் வேண்டும். வடக்கினைப் பிரதிநிதித்துவப் படுத்த ஒரு கபினட் அமைச்சர் இருக்கின்றார், மலையக மக்களுக்காக ஒரு கபினட் அமைச்சர் இருக்கின்றார். ஆனால் கிழக்குத் தமிழர்களின் தேவைகளை முன் வைப்பதற்கு எவரும் அற்ற நிலைதான் காணப்படுகின்றது. இவ்வாறு ஏன் நாங்கள் இருக்கின்றோம்.

கிழக்கு மாகாணத் தமிழர்களுக்கென்று ஒரு அமைச்சர் உருவாக வேண்டும். அவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதையும் நாங்கள் உணர வேண்டும். எனவே கிழக்குத் தமிழங்கள் இனிவரும் காலங்களில் மாற்று சமூகத்தின் அதிகாரத்தின கீழ் இருந்து தத்தளிக்காமல் தமக்கென்று தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும் என்ற விடையத்தை முன்வைக்க விரும்புகின்றேன். 

தமிழ் தேசியம் எதிர் கட்சிகளுக்கு ஆதரிக்கக் கூடாது என்று நான் கூறவில்லை ஆனால் ஆட்சியிலிருக்கும் தேசிய அரசியலுக்கும் தமிழர்கள் வாக்களிக்க வேண்டும். எமது பிரதிநிதிகளை அங்கும் அனுப்ப வேண்டும்.  இதனை ஏனைய சமூகத்திடமிருந்து கற்றுக் கொண்டுள்ளோம்.  தமிழர்களைப் பொறுத்த வரையில எமக்கென்று பலமுள்ள அரசியல் தலைவர்கள் இல்லை


கேள்வி: வரப்போகின்ற ஜனாதிபதித் தேர்தலை மையமாக வைத்துத்தான் பல அபிவிருத்திப் பணிகள் முடுக்கி விடப் பட்டுள்ளன என எதிர்க் கட்சிகள் கூறுகின்றதே….?

பதில்:  எதிர்க் கட்சிகள் என்ன கூறுகின்றார்கள் என்பதை விட ஜனாதிபதித் தேர்தலை மையமாக வைத்துத்தான் பல அபிவிருத்திப் பணிகள் முடுக்கி விடப் பட்டள்ளன என்று கூறினால் கடந்த காலங்களில் நடந்த அபிவிருத்திப் பணிகள் பற்றி என்ன சொல்லப் போகின்றார்கள். ஜனாதிபதித் தேர்தலை முன்வைத்துத்தான் நடைபெறுகின்றது என்றால் அபிவிருத்திகளின் தேவை இன்னும் உள்ளது அவைதான் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றினை மறந்துவிட முடியாது.

தற்போது முடிவுறாமல் இருக்கும் அபிவிருத்தித் திடங்களை செய்து முடிக்க வேண்டும் என்ற சிந்தனையோடு செயற்பட்டு வருகின்றது. என்னைப் பெறுத்த வரையில் தற்போதுதான் என்னூடாக பல அபிவிருதிகளைச் செய்வதற்குரிய வழிமுறைகள் ஏற்பட்டிருக்கன்றன. இதுவரை காலமும் எமக்கு எந்த விதமான வழிமுறைகளும் இல்லாமல் நாங்கள் ஜனாதிபதியிடம் சென்று இப்பிரதேசத்தில் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டும் என கூறியிருக்கின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்பு தேர்தல் தொகுதி கடந்த காலங்களில் அபிவிருத்தியில் புறக்கணிக்கபட்டு வந்துள்ளது. என ஜனாதிபதின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளேன். பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன் அவர்கள் பட்டிருப்புத் தொகுதிக்கு நேரடியாக வந்து பார்வையிட்ட பின்னர் ஜனாதிபதியிடம் கூறியிருந்தார் பட்டிருப்புத் தொகுதியில் எந்தவொரு அபிவிருத்திகளும் மேற்கொள்ளாமல் அங்குள்ள மக்கள் வாடுகின்றார்கள் எனத் தெரிவித்திருந்தார். எனவே கடந்த காலங்களில் புறக்கணிக்கபட்டு வந்த பல பகுதிகள் முன்னேற்றமடைய வேண்டும் என்ற நோக்குடன் அபிவிருத்திகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாக நடைபெற்று வருகின்றன.

கேள்வி: மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முதன் முறையாக ஜனாதிபதியின் இணைப்பாளரான நீங்கள் நிமிக்கப் பட்டு பெறுப்பேற்று வந்துள்ளீர்கள், அதனைவிட மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கு  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராகவும், ஜனாதிபதியின் ஆலோசகராகவும், நியமிக்கப் பட்டுள்ளீர்கள் இந்த மாவட்ட மக்களுக்கு உங்களுடைய பணி எவ்வாறு அமையப் போகின்றன? 

பதில்:  உண்மையைச் சொல்லப் போனால் ஜனாதிபதியின் இணைப்பாளராக, அல்லது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக இருந்து கொண்டு தற்போதைக்கு என்னால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் மிகவும் குறைவாகத்தாக் காணப்படுகின்றது.  நான் ஜனாதிபதியினால் நியமிக்கப் பட்டுள்ளதனால் உரிமையுடன் எதனையும் தட்டிக்கேட்க முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டாலே ஒழிய எனது பதவியை வைத்து சில வேலைத் திடங்களை முன்னெடுக்க முடியுமே தவிர மக்களுக்காக பாரிய திட்டங்களை முன்னெடுக்க முடியாது.

ஆனால் எங்களைப் போன்றவர்கள் இங்கு இல்ல விட்டால் கிழக்கிலுள்ள தமிழர்களுக்கு அபிவிருத்திகளை எவ்வாறு மேற்கொள்ள முடியும் என்பதை ஒவ்வொரு தமிழனும் கேட்க வேண்டும் என நான் கருதுகின்றேன். நாங்கள் இனிவரும் காலத்தில் அபிவிருத்திகளை மட்டுமல்லாது, எமது உரிமைகளையும், கவனமாகச் சிந்தித்து எமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். 

இந்த விடையத்தில் எதிர் கட்சியிலிருந்து குரல் கொடுப்பவர்களைப்போல் நானும் அரசிற்குள் இருந்து கொண்டு தமிழ் மக்களின் உரிமைக்காகவும்,  அபிவிருத்திகளுக்காகவும், எமது வரங்கால கால சந்தத்தியினரின் எதிர் காலத்திற்காகவும், நான் குரல் கொடுப்பேன் என்பதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.  ஆனால் இனிவரும் காலங்களில் அபிவிருத்திகள் சரியாக முன்னெடுக்கப்படல் வேண்டும். தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கபட்டல் வேண்டும்.  மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படல் வேண்டும் இவை எல்லாவற்றிககும் மேலாக தமிழர்களின் பூர்வீக பாரம்பரிய உரிமைகள், பாதுகாக்கப் படல் வேண்டும், அதற்கு ஒரு பலத்தினை இந்த கிழக்கு மாகாணத்தில் ஏற்படுத்துவோம் என்பனைக் கூறிக் கொள்கின்றேன்.

கேள்வி:தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறுகின்றதே பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு வட கிழக்கில் காணிகளைக் கொடுத்து உதவுவோம் என்று கூறுகின்றதே இது எந்தளவு சாத்தியம்? 

பதில்: காணிகளைக் கொடுக்கலாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறினால் வடக்கில் இருந்த மலையக மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு பாதுகாத்தார்கள் என்பது பற்றி என்னால விரிவாகக் கூறமுடியும். ஏனெனில் வன்னி மாவட்டத்திற்கு அந்த மக்களைத்தான் ஆயுதப் போராட்டத்திற்குள் தள்ளி சூறையாடினார்கள். இவ்வாறான வேண்டுகோளுக்கு போகக் கூடாது.

எனது கருத்து என்னவெனில் இலங்கை முழுவதும் தமிழர்கள் வாழ்கின்றார்கள் இலங்கை முழுவதும் தமிழர்கள் வாழ வேண்டும்.  இது எமது நாடு எமது பாரம்பரிய பூமி என்ற கருத்தில் நாங்கள் வாழ வேண்டும்.

தற்போது கிழக்குத் தமிழர்களின் எதிர் காலைத்தை ஒரு கேழ்விக்குறியாக்கி வைத்துவிட்டு நாங்கள் மலையக மக்களைப் பாதுகாப்போம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறுவது. மிகவும் வேடிக்கையாக இருக்கின்றது. ஏனெனில் வடக்கில் தமிழராட்சி கிழக்கில் வேறு ஒருவரின் ஆட்சிக்கு  நாங்கள் தயார் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காக்கிரசுடன், பேச்சுவார்த்தை நடாத்திய தமிழ் தேசியத் தலைவர்கள்  கிழக்குத் தமிழர்களைப் பற்றிப் பேசுவதங்கு அவர்களுக்கு என்ன அருகதை இருக்கின்றது.

கிழக்கு மாகாணம் தமிழர்களின் ப+ர்வீக ப+மி தமிழர் ஒருவர் ஆட்சியிலிருக்க வேண்டிய பூமி எமது எதிர காலைத்தையே கேள்விக் குறியாக்கிவிட்டு தற்போது நாங்கள் மலையக் தமிழர்ளைப பாதுகாப்போம் என்றால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். கிழக்கில் நாங்கள் தத்தழித்துக் கொண்டிருக்கும் இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிசுடன் என்ன அடிப்படையில் ஒற்றை ஆட்சியினை அமைப்பதற்குத் தயாரானார்கள். கிழக்குத் தமிழர்களை பார்வையாளர்களாக மாற்றிவிட்டு தற்போது மலையம் பற்றிப்பேசுகின்றார்கள். இது வெறும் வேடிக்கையான விடையமாகும்.

கேள்வி: காலப்போக்கில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசிலிருந்து விலகி தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டுச் சேருமாக இருந்தால் நிலமை எவ்வாறாக அமையும். 

பதில்:  தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடன் கூட்டுச் சேர்ந்தால் கிழக்குத் தமிழர்கள் இன்னும் பாதிக்கப் படுவார்கள். ஏனெனில் கிழக்குத் தமிழர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை ஒருபோதும் நம்ப முடியாது. கிழக்குத் தமிழர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு பகடைக் காயாகப் பாவித்து அரசியல் தீர்வுக்கு வரமுடியாது.

எந்த அடிப்படையில்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை நம்பமுடியும். என்ற கேழ்வியை நான் எழுப்ப விரும்புகின்றேன். 1987 ஆம் ஆண்டு தமிழ் முஸ்லிம் உறவுகளைக் குலைத்து முஸ்லிங்களைத் தனித்துவமாகக் கொண்டு சென்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறு தமிழர்களின் எதிர் காலத்தைப் பாதுகாக்கப் போகின்றது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை நம்பி தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன அருகதையில் பேச்சுவார்த்தையும், கூட்டாட்சியும் பற்றிப் பேசுகின்றார்கள். நாங்கள் அதனை ஒருபோதும் நம்ப முடியாது. தமிழர்களின் தனித்துவம் பாதுகாக்கப்படல் வேணடும் என்ற விடையத்தில் நாங்கள் மறந்துவிடக் கூடாது.

ஆட்சி நடக்க வேண்டுமாக இருந்தால் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிங்கள் என மூன்று சமூகமும் இணைந்துதான் ஆட்சி புரிய வேண்டுமே தவிர முஸ்லிங்களும், தமிழர்களும் ஒருபோதும் ஒன்றிணைய முடியாது.

முஸ்லிங்களும், தமிழர்களும் ஒன்றிணைவதை கிழக்கு மாகாணத் தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவே முடியாது. ஏனெனில் கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் பொருளாதார ரீதியிலும், அரசில் பலத்திலும் ஒரு தத்தழிக்கும் நிலையில் இருக்கும்போது  தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடன் கூட்டுச் சேருவோம் என்றால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழர்களுக்காக இதுவரையில் எனைத் தெரிவித்திருக்கின்றது. எனவே இந்த இரு கட்சிகளின் கூட்டிணைவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழ் தேசியம் இவ்வாறான  பாதையில் செல்லுமானால் கிழக்குத் தமிழர்கள் தமிழ் தேசியத்தைத் தூக்கிய எறியும் நிலைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தள்ளப்படும். என்பதனையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். என அவர் தெரிவித்தார். 

(நேர்கண்டவர் : (எஸ்.ராதி)

SHARE

Author: verified_user

0 Comments: