20 Nov 2016

கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் 2016ம் ஆண்டுக்கான திட்ட முன்னனேற்ற ஆய்வு ஒன்றுகூடல்…

SHARE
கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களின் 2016 ஆம் ஆண்டுக்குரிய திட்ட முன்னேற்றம் சம்மந்தமான ஆய்வு ஒன்றுகூடல் நிகழ்வு அண்மையில் திருகோணமலை
கிழக்கு மாகாண விவசாய அமைச்சரின் அலுவலக கேட்போர் கூடத்தில் அமைச்சின் செயலாளர் சிவநாதன் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தங்கவேல், அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களான விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் மற்றும் மாவட்டப் பிரதிப் பணிப்பாளர்கள், மீன்பிடித் திணைக்களப் பணிப்பாளர் மற்றும் பொறுப்பு வாய்ந்த உத்தியேகஸ்தர்கள், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்கள ஆணையாளர் மற்றும் மாவட்ட உத்தியேகஸ்தர்கள், நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் மற்றும் மாவட்டப் பணிப்பாளர்கள், கால்நடை அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் மற்றும் மாவட்டப் பணிப்பாளர்கள், அமைச்சின் செயலக உத்தியோகஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது அமைச்சின் கீழுள்ள மேற்குறிப்பிட்ட திணைக்களங்களினால் 2016ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் சாதக பாதக நிலைமை, மேற்கொள்ளப்பட இருக்கின்ற திட்டங்கள் போன்றன தொடர்பில் ஆய்வு ரீதியாக கலந்துரையாடல் இடம்பெற்றது. அத்துடன் அனைத்துத் திணைக்கள அதிகாரிகளின் திட்ட செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சரிடம் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதுடன் எதிர்வரும் காலத்திற்குரிய திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








SHARE

Author: verified_user

0 Comments: